சென்சூ 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்சூ 1
Shenzhou 1
神舟一号
திட்ட விபரம்
திட்டப்பெயர்: சென்சூ 1
Shenzhou 1
神舟一号
ஏவுதளம்:ஜியாகுவான் செயற்கைக்கோள் ஏவு மையம்
ஏவுதல்: நவம்பர் 19, 1999 22:30 ஒசநே
இறக்கம்: நவம்பர் 20, 1999 19:41 ஒசநே
கால அளவு: 21 மணி 11 நிமி.
சுற்றுக்களின் எண்ணிக்கை:14
சேய்மைப்புள்ளி:315 கிமீ
அண்மைப்புள்ளி:195 கிமீ
காலம்:89.6 நிமி.
சுற்றுப்பாதை சாய்வு:42.6°
தொடர்புள்ள திட்டங்கள்
முந்திய திட்டம்அடுத்த திட்டம்
எதுவுமில்லைசென்சூ 2

சென்சூ 1 (Shenzhou 1) 1 நவம்பர் 19, 1999, அன்று விண்வெளியில் ஏவப்பட்டது. இதுவே முதல் மனிதர் ஏற்றிச்செல்லாத சீன விண்வெளிக்கலம். இந்த விண்வெளிக்கலத்தில் உயிருக்கு தேவையான சாதனங்களும், அவசரகால வெளியேற்ற முறைகளையும் கொண்டிருக்கவில்லை. பூமியை 14 முறை சுற்றி வந்த பின், நமிபியக் கரையில் 18:49 உலக நேரத்தின் படி, விண்வெளிக்கலத்தை கவனித்து வந்த யுவான்வாங் 3 கலத்தின் ஆணைப்படி பூமிக்குத் திருப்பிவிடப்பட்டது. பூமிக்கு வெற்றிகரமாக நுழைந்ததும்,அதை அனுப்பிவைக்கப்பட்ட தளத்திலிருந்து 415 கி.மீ. கிழக்கில், மத்திய மங்கோலியாவில் 110 கி.மீ வடமேற்கில் உள்ள ஊஹாய்யில் தரை இறங்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்சூ_1&oldid=1438069" இலிருந்து மீள்விக்கப்பட்டது