செஞ்சால் ஏரி
Appearance
செஞ்சால் ஏரி Senchal Lake | |
---|---|
அமைவிடம் | டார்ஜீலிங் |
ஆள்கூறுகள் | 26°59′38″N 88°15′55″E / 26.9938°N 88.2652°E |
வகை | நீர்த்தேக்கம் |
வடிநில நாடுகள் | இந்தியா |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 8,160 அடி (2,490 m) |
செஞ்சால் ஏரி (Senchal Lake) இது, டார்ஜீலிங் நகரத்திற்குத் தென்கிழக்காக 10 கிமீ தொலைவில் செஞ்சால் ஏரி உள்ளது, இந்தியாவின் டார்ஜீலிங் நகரத்திற்குக் குடிதண்ணீர் வழங்கும் முதன்மையான நீர்த்தேக்கமாகும். இந்த நீர்நிலை இரண்டு ஏரிகளால் ஆனதாகும். வட செஞ்சால் ஏரி 1910 இலும் தென் செஞ்சால் ஏரி 1932 இலும் கட்டப்பட்டன.[1] ஏரி 8,160 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலையில் உலகிலேயே மிக உயரமான கோல்ஃப் மைதானங்கள் உள்ளன. செஞ்சால் ஒரு பிடித்த சுற்றுலா மையமாக உள்ளது. செஞ்சாலில் உள்ள ஒரு சுற்றுலா விடுதி, சுற்றுலாப்பயணிகளுக்கு வசதியாக உள்ளது..[2] இந்த ஏரி செஞ்சால் கானுயிர்க் காப்பிடத்தின் ஒரு பகுதியாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ray, B.; Shaw, R. (2018). Urban Drought: Emerging Water Challenges in Asia. Disaster Risk Reduction. Springer Singapore. p. 372. ISBN 978-981-10-8947-3. Retrieved 30 July 2022.
- ↑ zubin.com