சூலாடு குத்துதல்
சூலாடு குத்துதல் என்பது நாட்டார் தெய்வங்களுக்கு செய்யப்படும் பலி சடங்குகளில் ஒன்றாகும். இதனை சூலாடு பலி அல்லது துவளக்குட்டி கொடுத்தல் என்று அழைக்கிறார்கள். [1]
உக்கிரமான பெண் தெய்வங்களை சாந்தப்படுத்த இந்த சூலாடு குத்துதல் சடங்கு நடத்தப்படுகிறது. இந்த சடங்கின் போது ஆண்களே முன்நின்று செய்கின்றனர். பெண்களும் குழந்தைகளும் சூலாடு குத்தும் சடங்கில் பங்கு கொள்ளவோ பார்க்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.
சூலாடு
[தொகு]நிறைமாத சினையாக உள்ள பெண் ஆடுகளை சூலாடு என்கிறோம். சூலாட்டினை தெய்வத்தின் முன்பு நிறுத்துகின்றனர். ஆட்டின் சம்மதம் பெற்றவுடன் சினை ஆட்டின் வயிற்றை குத்திக்கிழித்து உள்ளே இருக்கும் குட்டியை எடுத்து பலி பீடத்தின் மீது வைக்கின்றார்கள். இரத்தப்போக்கால் ஆடும், போதிய அளவு வளராத குட்டியை தாயிடமிருந்து பிரித்ததால் ஆட்டுக்குட்டியும் இறந்துவிடுகின்றன. [1]
துவளக்குட்டி
[தொகு]சினை ஆட்டின் வயிறை கிழித்து குற்றுயிராக எடுக்கப்படும் இளம்குட்டியை பலிபீடத்தில் வைக்கின்றனர். இந்த இளம்குட்டி கொஞ்சம் கொஞ்சமாக துவளும். அதனை துவளும் குட்டி என்ற பொருளில் துவளக் குட்டி என்கின்றனர்.[2]
சூலாட்டினை குத்தி துவளக்குட்டியை இறைவனுக்கு தரும் இந்தச் சடங்கினை துவளக்குட்டி கொடுத்தல் என்கின்றனர்.
இவற்றையும் காண்க
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "சிறுதெய்வ வழிபாட்டில் இருந்து பிரிக்கவே முடியாத ரத்த பலி". இந்து தமிழ் திசை.
- ↑ அறியப்படாத தமிழகம் (Ariyappadatha Tamizhagam) - தோ மூலம். பரமசிவன் - காலச்சுவடு பதிப்பகம்