சூலனூர் மயில்கள் உய்விடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூலனூர் மயில்கள் சரணாலயம் அல்லது மயிலதும்பாரா (Choolannur Pea Fowl Sanctuary அல்லது Mayiladumpara) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், பாலக்காடு மாவட்டதில் உள்ள மயில்களுக்கான உய்விடமாகும். இந்த சரணாலயம் கோட்டாயிலிருந்து 7 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. 500 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்துக்குச் செல்ல அடர்ந்த காடுகள் வழியாக மலையேறிச் செல்லவேண்டும். அழகான இந்த சரணாலயத்தை பார்வையிட காலை அல்லது மாலை நேரமே சிறந்தது. இங்கு அரிய பறவை இனங்கள், மூலிகைகள் நிறைந்துள்ளன.[1]

குறிப்புகள்[தொகு]