சூப்பர் மரியோ வேர்ல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூப்பர் மரியோ வேர்ல்ட்  (Super Mario World) என்பது 1990 ஆம் ஆண்டின் பக்க-திரை உருளல் இயங்குதள விளையாட்டு ஆகும். இது நிண்டெண்டோவால் சூப்பர் நிண்டெண்டோ என்டர்டெயின்மென்ட் சிஸ்டம் (எஸ்என்இஎஸ்) க்காக உருவாக்கப்பட்டு  வெளியிடப்பட்டது.

மரியோ விளையாட்டு தொடரின் எதிரியான பவுசர் மற்றும் நண்பர்களிடம் இருந்து இளவரசி டோட்ஸ்டூல் மற்றும் டைனோசர் லேண்டை காப்பாற்ற மரியோவின் தேடலின் கதையே இந்த விளையாட்டு ஆகும். முந்தைய சூப்பர் மரியோ நிகழ்பட விளையாட்டுக்களை போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

விளையாடும் முறை[தொகு]

சூப்பர் மரியோ வேர்ல்ட் விளையாடுபவர்கள் மரியோ அல்லது அவரது சகோதரர் லூய்கியை ஒவ்வொரு நிலையிலும் கட்டுப்படுத்தி கொடிக் கம்பத்தை அடைவதே விளையாட்டின் குறிக்கோளாகும். சூப்பர் மரியோ வேர்ல்டில் யோஷி என்ற டைனோசர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூபா ட்ரூபாஸ் எனப்படும் ஆமையை ஒத்த விலங்கின் ஓடுகளை சாப்பிடுவதன் மூலம் எதிரிகளை உண்ணவும் திறன்களைப் பெறவும் கூடியதாக யோஷி வடிவமைக்கப்பட்டுள்ளது. விளையாடுபவர்கள் மரியோவை ஓடுதல், குதித்தல், சில பவர்-அப்களின் உதவியுடன் பறக்க அல்லது மிதக்க செய்ய முடியும்.[1] மரியோவை இலக்கை அடைவதற்காக வெவ்வேறு பாதைகளிலும் செலுத்த முடியும். தடைகளையும் எதிரிகளையும் ஓடுதல், குதித்தல், மற்றும் எதிரிகளை வீழ்த்தல் அல்லது தோற்கடிப்பதன் மூலம் பயணித்து இலக்கை அடைய வேண்டும்.[2] நெருப்பு பூக்கள், காளான் என்பவற்றை பிடிப்பதன் மூலம் சிறப்பு திறன்களை மரியோ பெற்று கொள்ளும். இந்த விளையாட்டு மொத்தம் 96 நிலைகளை கொண்டுள்ளது. யோஷி டைனோசர் மேல் மரியோ சவாரி செய்யலாம். யோசி பெரும்பாலான எதிரிகளை சாப்பிடக் கூடியது. விளையாட்டின் முடிவை அடைய ஏழு உலகங்கள் வழியாக செல்ல வேண்டும் என்பதே முக்கிய நோக்கம் என்றாலும், ரகசிய  வழிகளைப் பயன்படுத்தி விளையாடுபவர் விளையாட்டை மிக வேகமாக வெல்ல முடியும்.

வெளியீடு[தொகு]

சூப்பர் மரியோ வேர்ல்ட் 1990 ஆம் ஆண்டு  நவம்பர் 21 அன்று யப்பானில் வெளியிடப்பட்டது.[3] யப்பானில் வெளியிடப்பட்ட எஸ்.என்.இ.எஸ்ஸிற்கான இரண்டு வெளியீட்டு விளையாட்டுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த விளையாட்டு ஆகஸ்ட் 1991 இல் வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.[4] நிண்டெண்டோ ஆர்கேட் பெட்டிகளுக்கான பதிப்பையும் வெளியிட்டது.

வரவேற்பு[தொகு]

சூப்பர் மரியோ வேர்ல்ட் கேம்ரேங்கிங்ஸ் தரவரிசையில் எல்லா நேரத்திலும் விளையாடப்படும் விளையாட்டில் பதினேழாவது இடத்தைப் பெற்றது.[5] நிண்டெண்டோவினால் உலகளவில் 20.61 மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளது. எஸ்.என்.ஈ.எஸ் இன் அதிகம் விற்பனையாகும் விளையாட்டாக அமைந்தது.[6]

விருதுகள்[தொகு]

சூப்பர் மரியோ வேர்ல்ட்டிற்கு ஆண்டின் விளையாட்டுக்கான விருதுகளை நிண்டெண்டோ பவர் மற்றும் பவர் பிளேயர் வழங்கின.[7] பல விமர்சகர்கள் எல்லா காலத்திலும் மிகச்சிறந்த நிகழ்பட விளையாட்டுகளில் ஒன்றாக அறிவித்தனர். 2014 ஆம் ஆண்டில் நிண்டெண்டோ இதழ் எல்லா நேரத்திலும் மூன்றாவது பெரிய நிண்டெண்டோ விளையாட்டாக மதிப்பிட்டது.[8] 2012 ஆம் ஆண்டில் நிண்டெண்டோ பவர் சூப்பர் மரியோ வேர்ல்டு ஐந்தாவது மிகப் பெரிய விளையாட்டு என்று மதிப்பிட்டது. 2007 ஆம் ஆண்டில், ரெட்ரோ கேமர் இதை எல்லா நேரத்திலும் சிறந்த இயங்குதள விளையாட்டாக மதிப்பிட்டது.[9] அதே நேரத்தில் யுஸ்கேமர் இதை 2015 ஆம் ஆண்டில் சிறந்த சூப்பர் மரியோ இயங்குதள விளையாட்டாக பட்டியலிட்டது.[10]

குறிப்புகள்[தொகு]

  1. "Super Mario World - Review - allgame". 2010-02-16. http://allgame.com/game.php?id=2630&tab=review. 
  2. "Test du jeu Super Mario World sur SNES" (in fr). http://www.jeuxvideo.com/articles/0001/00010736-super-mario-world-test.htm. 
  3. "スーパーマリオワールド (SFC) - ファミ通.com". https://www.famitsu.com/games/t/3496/. 
  4. "Super NES games". http://www.nintendo.com/consumer/gameslist/manuals/snes_games.pdf. 
  5. "All time best". http://www.gamerankings.com/browse.html?site=&cat=0&year=0&numrev=4&sort=0&letter=&search=. 
  6. "30 Best-Selling Super Mario Games of All Time" (in en). https://www.gizmodo.co.uk/2015/09/30-best-selling-super-mario-games-of-all-time-on-the-plumbers-30th-birthday/. 
  7. Nintendo Power staff 1992, p. 72.
  8. Castle 2014, p. 69.
  9. Jones 2007, p. 63.
  10. Parish, Jeremy (2017-11-02). "What's the Greatest Mario Game Ever? Find Out Where Mario Odyssey Lands in Our Updated Rankings!" (in en). https://www.usgamer.net/articles/the-definitive-super-mario-rankings-30-years-35-games/page-3.