உள்ளடக்கத்துக்குச் செல்

சூன்யாத்தா கெயித்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூன்யாத்தா கெயித்தா (கிபி 1217 - 1255[1]) ஒரு சக்தி வாய்ந்த இளவரசரும், மாலிப் பேரரசை நிறுவியவரும் ஆவார். பெயர் பெற்ற மாலியின் பேரரசன் மான்சா மூசா இவரது பேரன்.[2][3]

சூன்யாத்தாவின் இறப்பின் பின்னர் மாலிக்குச் சென்ற மொரோக்கோவைச் சேர்ந்த முகம்மது இப்னு பத்தூத்தா (1304-1368), துனீசிய வரலாற்றாளர் அபு சயத் அப்துல் ரகுமான் இபின் முகம்மது இபின் கால்தூன் அல் அத்ராமி (1332-1406) ஆகியோரின் எழுத்துமூல வரலாறுகள் மாண்டே மொழியில் உள்ள வாய்மொழி வரலாறுகளோடு ஒத்துப்போவதுடன், சூன்யாத்தா வாழ்ந்ததற்கான வலுவான சான்றுகளையும் வழங்குகின்றன. மனின்கா மக்களின் சுண்டியாத்தா காவியம் என்னும் வரலாற்றுக் காவியம் சூன்யாத்தாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. இக்காவியம் பல தலைமுறைகளாக வாய்வழியாகவே கடத்தப்பட்டு வந்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Snodgrass (2009), p. 77.
  2. Cox, George O. African Empires and Civilizations: ancient and medieval, African Heritage Studies Publishers, 1974, p. 160.
  3. Noel King (ed.), Ibn Battuta in Black Africa, Princeton, 2005, pp. 45–46. Four generations before Mansa Suleiman who died in 1360 CE, his grandfather's grandfather (Saraq Jata) had embraced Islam.
  4. Conrad, David C., Empires of Medieval West Africa, Infobase Publishing, 2005, p. 12, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4381-0319-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூன்யாத்தா_கெயித்தா&oldid=2697022" இலிருந்து மீள்விக்கப்பட்டது