சூசெட் ஜோர்டன்
சூசெட் ஜோர்டன் (Suzette Jordan, 1974 - 13, மார்ச் 2015) பாலியல் வல்லுறவுக்கு எதிராகப் போராடியவர். கொல்கத்தாவின் புகழ்பெற்ற வணிகவீதிகளுள் ஒன்றான பார்க் ஸ்ட்ரீட்டில் பாலியல் வல்லுறவுக்குத் தாம் உள்ளானதைத் துணிச்சலாக 2013ல் வெளியுலகிற்கு அறிவித்ததன்மூலம் "பார்க் ஸ்ட்ரீட் வல்லுறவில் பாதிக்கப்பட்ட பெண்" என்றே பரவலாக அறியப்பட்டார்.[1][2] 'பாதிக்கப்பட்டவர்' என்பதனைவிட அத்தகைய நிகழ்விலிருந்து 'மீண்டெழுந்தவர்' என்பதற்கே சான்றாகத் திகழ்ந்த அவர் தமது 40-வது அகவையில் மூளைக்காய்ச்சலால் உடல்நலம் குன்றி கொல்கத்தாவில் உயிரிழந்தார்.[1]
மேற்கூறிய பாலியல் வல்லுறவுச் சம்பவம் பிப்ரவரி 2012ல் நிகழ்ந்தது. இந்திய சட்டப்படி வல்லுறவில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை அவரது அனுமதியின்றி வெளியிடக்கூடாது என்ற நிலையில் அந்த உரிமையை மறுதலித்து ஜூன் 2013ல் தனது அடையாளத்தை பகிரங்கப்படுத்தியபோது அவர் கூறியதாவது: "
“ | "அது எனது தவறில்லை எனும்போது நான் ஏன் அடையாளத்தை ஒளிக்கவேண்டும்? எனது செயலால் நடக்காத ஒன்றுக்கு நான் ஏன் வெட்கமடைய வேண்டும்? நான் மிருகத்தனத்துக்கு உள்ளாக்கப்பட்டேன், சித்திரவதைக்கு ஆளானேன், வன்கலவி செய்யப்பட்டேன், அதனால் நான் போராடுகிறேன், போராடுவேன்.[3] | ” |
—Suzette |
அவரது மரணத்தின்போது குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது. அம்மூவரும் தங்கள் மீது சாட்டப்பட்டக் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை; முக்கியக் குற்றவாளி உள்ளிட்ட மற்ற இருவர் கைதுசெய்யப்படவில்லை.[4]
ஜோர்டான் பெண் உரிமைகளுக்கானச் செயற்பாட்டாளராகப் பணியாற்றினார். பாலியல் மற்றும் குடும்ப வன்முறைக்குள்ளானோருக்கு உதவும் அமைப்பிற்காக ஆலோசனை வழங்குவோராகவும் சிறிதுகாலம் பணியாற்றினார்.[5]
மரணம்
[தொகு]சூசெட் ஜோர்டன் 40 ஆவது அகவையில் மூளைக் காய்ச்சல் நோயால் மார்ச் 13, 2015 அன்று மரணமடைந்தார். அவரது இறுதிநாட்களில் அவரது இரு மகள்களுடன் வசித்து வந்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Suzette Jordan: India anti-rape campaigner dies after illness". BBC News www.bbc.com. 13 March 2015. பார்க்கப்பட்ட நாள் 13 March 2015.
- ↑ "Park Street Rape Survivor Suzette Jordan, Who Took On Bengal Government, Dies". NDTV www.ndtv.com. ndtv.com. 13 March 2015. http://www.ndtv.com/india-news/park-street-rape-survivor-suzette-jordan-who-took-on-bengal-government-dies-746256. பார்த்த நாள்: 14 March 2015.
- ↑ Jha, Rupa (21 June 2013). "Why an India rape victim disclosed her identity". BBC News www.bbc.com. பார்க்கப்பட்ட நாள் 13 March 2015.
- ↑ "Park Street rape victim Suzette Jordan dies in Kolkata". Press Trust of India india.com. us.india.com. 13 March 2015. http://us.india.com/news/india/park-street-rape-victim-suzette-jordan-dies-in-kolkata-314829/. பார்த்த நாள்: 14 March 2015.
- ↑ Mohan, Shriya (3 July 2013). "How Do You Survive Being Named ‘The Park Street Rape Victim’?". Yahoo News India in.news.yahoo.com. https://in.news.yahoo.com/how-do-you-survive-being-named-%E2%80%98the-park-street-rape-victim%E2%80%99--054758334.html. பார்த்த நாள்: 14 March 2015.