உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாமி விவேகானந்த யோகா அனுசாந்தனா சமஸ்தானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுவாமி விவேகானந்த யோகா அனுசாந்தனா சமஸ்தானம் என்பது சுருக்கமாக எஸ்-வியாசா அல்லது எஸ்.வி.யாசா என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.இது இந்தியாவின் பெங்களூரில் அமைந்துள்ள ஒரு வகை முதல்தரமான  பல்கலைக்கழகமாகும்.[1] இப்பல்கலை கழகமானது சுவாமி விவேகானந்தரின் போதனைகளின் அடிப்படையில் யோகா ஆய்வுகளை மேற்கொள்கிறது. டாக்டர் பி.ஆர்.ராமகிருஷ்ணா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் ஆவார்.

எண்ணத்திற்கும்  செயலுக்கும் இடையேயான வேறுபாடுகள் குறித்த பிரச்சனைகள் மற்றும் மனக் கோளாறு மற்றும் ஒற்றைத் தலைவலி,மன சோர்வு பிரச்சனைகள் ஆகிய நரம்பியல் கோளாறுகள் குறித்து நிம்ஹான்ஸ்(NIMHANS) மற்றும் ஸ்வயாசா (SVYASA)ஆகியன செயல்படுகின்றன.

ஸ்வயாசாவானது (SVYASA)யோகா மற்றும் யோக சிகிச்சைகள் குறித்த இரண்டு பிரிவிலும் நிபுணத்துவம் உடையது. யோகா பற்றிய  ஆராய்ச்சி மற்றும் யோகா சிகிச்சை ஆகியனவற்றை மேற்கொள்கிறது. இதன் அமைவிடமானது முக்கிய வளாகமான பெங்களூருவில் உள்ள பிரசாந்தி குட்டிராம் விவேகானந்தா சாலை, கல்லுபள்ளு அஞ்சல், ஜிகானி, அனேகல் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

பிரிவுகள்

[தொகு]

பல்கலைக்கழகத்தில் 5 முக்கிய பிரிவுகள் உள்ளன

  • யோகா மற்றும் ஆன்மீகம்
  • யோகா மற்றும் வாழ்க்கை அறிவியல் பிரிவு
  • யோகா இயற்பியல் மற்றும் அறிவியல் பிரிவு
  • யோகா மேலாண்மை மற்றும் ஆய்வுகள் பற்றிய பிரிவு
  • யோகா மற்றும் மனிதநேய பிரிவு

ஆகியனவாகும்.

பாடத்திட்டங்கள்

[தொகு]
  • முனைவர் (யோகா)
  • முனைவர்(யோகா மற்றும் மறுவாழ்வு)
  • முதுகலை அறிவியல்

(யோகா சிகிச்சை)

  • முதுகலை (யோகா மற்றும் நனவு)
  • யோகா சிகிச்சையில் முதுகலை சான்றிதழ்
  • (மருத்துவர்கள்) யோகா சிகிச்சையில் முதுகலை சான்றிதழ்
  • இளங்கலை (யோகா சிகிச்சை)
  • இளங்கலை அறிவியல் (யோகா மற்றும் நனவு)
  • இளங்கலை (இயற்கை மற்றும் யோக அறிவியல்)
  • ஆயுர்வேத இயற்கை மருத்துவ சிகிச்சை பயிற்சி
  • யோகா பயிற்றுவிப்பாளர்

இவற்றையும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. நிம்ஹான்ஸ் மன-நரம்பியல் கோளாறுகள் மற்றும் மூளை சிகிச்சை முறைகள் பற்றிய ஆய்வுகளை மேம்படுத்துகிறது[1]