உள்ளடக்கத்துக்குச் செல்

சுல்தானா நருண் நகார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுல்தானா நருண் நகார்
Sultana Nurun Nahar
செருமனியில் நகார் உரையாற்றல்
கல்விமுனைவர் (அணுக்கோட்பாடு)
படித்த கல்வி நிறுவனங்கள்டாக்கா பல்கலைக்கழகம், வேய்ன் மாநிலப் பல்கலைக்கழகம்

சுல்தானா நருண் நகார் (Sultana Nurun Nahar) வஙதேச-அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் ஓகியோ மாநிலப் பல்கலைக்கழக வானியல் துறை ஆராய்ச்சி அறிவியலாலர் ஆவார்.[1]

இவரது ஆராய்ச்சி ஒளிமின்னணுவாக்கம், மின்னன்-மின்னணு மீள்சேர்க்கை, ஒளிக்கிளர்வு, மொத்தல் ஆகியவற்றின் அணுவியல் நிகழ்வுகளில் அமைந்தது. இவர் முழு மின்னன்-மின்னணு மீள்சேர்க்கைக்கான ஒன்றிய முறையை உருவாக்குவதிலும் பிரீத்-பவுலி ஆர் அணிச்சார முறைக்கான கோட்பாட்டுக் கதிர்நிரலியல்( theoretical spectroscopy for Breit-Pauli R-matrix method) முறையை உருவாக்குவதிலும் புற்றுநோய் ஆற்றுவதற்கான ஒத்திசைவு மீநுண்-நோய்நாடல் முறை (resonant nano-plasma theranostics (RNPT))யை உருவாக்குவதிலும் பங்களிப்புகள் செய்துள்ளார் [2]

கல்வியும் வாழ்க்கைப் பணியும்[தொகு]

இவர் டாக்கா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் இளமறிவியல் பட்டமும் கோட்பாட்டு இயற்பியலில் மூதறிவியல் பட்டமும் பெற்றார். குவைய ஒளியியலில் முதுகலைப் பட்டமும் அணுக்கோட்பாட்டில் முனைவர் பட்டமும் மிச்சிகன், டெட்ராயிட்டில் உள்ள வேய்ன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

இவர் Atomic Astrophysics and Spectroscopy (Cambridge UP, 2011)எனும் பாடநூலினை அணில் கே. பிரதான் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார்.

ஆராய்ச்சி ஆர்வங்கள்[தொகு]

நகார் ஒளிமின்னணுவாக்கம், மின்னன்-மின்னணு மீள்சேர்க்கை உட்பட, வானியற்பியல், ஆய்வக மின்மங்களில் (Plasma) நிகழும் கதிரியக்க, மொத்தல் சார்ந்த அணுநிகழ்வுகளில் விரிவாக பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[3] இந்த அணு நிகழ்வுகளில் ஒளிக் கிளர்வும் கிளர்விறக்கமும் மின்னன்-மின்னணு சிதறலும் கூட உள்ளடங்கும். இவர் மேலும் கோட்பாடு கதிர்நிரலியல், உயிர்மருத்துவப் பயன்பாடுகளுக்கான கணினிசார் மீநுண் கதிர்நிரலியல், இருமின்னனியல் துணைக்கோள் தொடர்கள் ஆகிய தலைப்புகளிலும் ஆய்வு செய்துள்ளார்.[4][5] இவர் ஒளிபுகாமைத் திட்டம், இரும்புத் திட்டம் ஆகிய பன்னாட்டுக் கூட்டுமுயற்சிகளின் உறுப்பினரும் ஆவார்."[6] இத்திட்டங்களின் நோக்கம், கதிரியக்க, மொத்தல் சார்ந்த அணுநிகழ்வுகளை ஆய்வு செய்து வானியற்பியலாகப் பரவியுள்ள அணுக்களினதும் மின்னணுக்களினதுமான அணுசார் அளபுருக்களைத் துல்லியமாக அளந்து கண்டுபிடிப்பதாகும்.

விருதுகள்[தொகு]

இவர் ஜான் வீட்லி விருதைப் பெற்றார். இந்த விருது "இயற்பியல் ஆய்வைப் பல மூன்றாம் உலக நாடுகளில் கல்வி, கூட்டுறவு, தலைதாங்கல், அறநிலை வழிகாட்டல் ஆகியவற்றின் வழியாக முன்னெடுத்த முயற்சிகளுக்காகவும் குறிப்பாக, முசுலிம் பெண் அறிவியலாருக்கு முன்னோடியாகவும் எடுத்துகாட்டுப் பாத்திரமாகவும் விளங்கியதற்காக இவருக்கு வழங்கப்பட்டது."

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுல்தானா_நருண்_நகார்&oldid=3245589" இலிருந்து மீள்விக்கப்பட்டது