சுலேகேக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திராட்சையுடன் சுலேகேக் மற்றும் சக்கேட்
கிறிசுதுமசு ரொட்டியாக சுலேகேக், நார்வேயின் பாரம்பரிய கிறிசுதுமசு உணவாகும்.

சுலேகேக் (Julekake) என்பது ஒரு நார்வே நாட்டில் தயாரிக்கப்படும் கிறிசுதுமசு கேக் ஆகும். இது வெண்ணெய், சர்க்கரை, ஏலக்காய், மசாலாப் பொருட்கள், மிட்டாய், பழங்கள், திராட்சைகள் மற்றும் பாதாம் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட கேக் ஆகும்.[1] சில நேரங்களில் கேக்கிற்கு பதிலாக "கிறிசுதுமஸ் ரொட்டி" என்றும் அழைக்கப்படுகிறது. இதை சூடாக சாப்பிடலாம் அல்லது வறுத்து வெண்ணெயுடன் பரிமாறலாம்.[2]

தயாரிப்பு[தொகு]

வெதுவெதுப்பான பால், உப்பு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றுடன் சர்க்கரையை கலந்து கேக் தயாரிக்கப்படுகிறது.

பின்னர் கலவையில் ஈச்ட் சேர்த்து, ஓட்சு, வெண்ணெய் மற்றும் முட்டை, உலர்ந்த மற்றும் மிட்டாய், பழங்களுடன் கலக்கப்படுகின்றது.

மாவு மடிந்த பிறகு, ரொட்டி பிசைந்து வெண்ணெய் கொண்டு துலக்கப்படுகிறது. பின்னர் இரண்டு உயர்வுகள் வைத்து பரிமாறப்படுகின்றது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Fieldhouse, Paul. The World Religions Cookbook. Greenwood Press. பக். 36. 
  2. "Norwegian Christmas Bread (Julekake)". https://www.thespruceeats.com/julekake-norwegian-christmas-bread-recipe-305849. 
  3. "Julekake, Norwegian Bread Made to Serve at Christmas". Casper Morning Star. December 18, 1953. https://www.newspapers.com/clip/60315546/julekake/. பார்த்த நாள்: 1 October 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுலேகேக்&oldid=3708532" இருந்து மீள்விக்கப்பட்டது