சுரேசு கோபடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுரேசு கோபடே (Suresh Khopade) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சுரேசு அபாச்சி கோபடே என்ற பெயராலும் அறியப்படுகிறார். 1951 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். ஓர் எழுத்தாளரான இவர் ஓய்வு பெற்ற இந்திய காவல் சேவை அதிகாரியுமாவார். மகாராட்டிரா மாநிலத்தில் சமூக காவல் நடவடிக்கை முயற்சிகளின் ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறார். 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற வகுப்புவாத கலவரத்தின் போது, அப்போது அதிக பதட்டமான நகரமான பிவாண்டியைப் பாதுகாத்தார். [1] 1993 ஆம் ஆண்டு வீரத்திற்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தைப் பெற்றார் [2] குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு பொது ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். [3]

புனே மாவட்டத்தின் பாரமதி தாலுக்காவில் உள்ள மோர்காவன் என்ற சிறிய கிராமத்திற்கு அருகில் ஒரு கருத்தியல் பள்ளியை இவர் நிறுவியுள்ளார், இப்பள்ளி 'கூடச்சி சாலா' என்று பெயரிடப்பட்டது. இது பாரம்பரிய அர்த்தத்தில் ஒரு பள்ளி அல்ல, ஆனால் பள்ளிக்குச் செல்வதற்கான ஒரு சுற்றுலா மையமாக விவரிக்கப்படக்கூடிய இடமாகத் திகழ்ந்தது. குழந்தைகள். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளையும் பற்றிய சுவாரசியமான கற்றல் அனுபவத்தைப் பெற பல பள்ளிகள் இந்த பள்ளிக்கு வந்து பார்வையிட்டன்.

2014 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 13 ஆம் தேதியன்று இவர் பாராமதி தெற்கு மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Policing Muslim communities comparative international context. Springer. https://books.google.com/books?id=qe4G9HF5umQC&q=Suresh+Khopade&pg=PA89. 
  2. Who's who of Indian writers: 1999. Sahitya Akademi. https://books.google.com/books?id=QA1V7sICaIwC&q=Suresh+Khopade&pg=PA607. 
  3. "Guest Profiles". satyamevjayate - Aamir Khan Productions Pvt. Ltd. பார்க்கப்பட்ட நாள் 11 May 2018.
  4. Shaikh, Zeeshan (13 March 2014). "Against Sule, officer who hunted down dacoits". Indian express. http://indianexpress.com/article/india/politics/against-sule-officer-who-hunted-down-dacoits/. பார்த்த நாள்: 16 March 2014. 
  5. "Khopade gets AAP ticket for Baramati". Sakal Times. 13 March 2014. http://www.sakaaltimes.com/NewsDetails.aspx?NewsId=5496397314920838789&SectionId=5494605966908300850&SectionName=Civic&NewsDate=20140313&NewsTitle=Khopade%20gets%20AAP%20ticket%20for%20Baramati. பார்த்த நாள்: 16 March 2014. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேசு_கோபடே&oldid=3853942" இலிருந்து மீள்விக்கப்பட்டது