சுரூபா முகர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுரூபா முகர்ஜி (Suroopa Mukherjee) ஓர் இந்திய எழுத்தாளர். போபால் பேரழிவு பற்றிய புத்தகம் உட்பட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான பல புத்தகங்களை எழுதியவர்.[1] டெல்லி பல்கலைக்கழக இந்து கல்லூரியில் ஆங்கில இலக்கியம் கற்பிக்கும்[2] இவர், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பெருநிறுவன குற்றங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்படுத்தப்பட்ட மாணவர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

பெரியவர்களுக்காக வெளியிட்ட இவரது முதல் புதினம் அக்ராஸ் தி மிஸ்டிக் ஷோர் மார்ச் 2007 இல் மேக்மில்லன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இவரது "சர்வைவிங் போபால்" போபால் பேரழிவினால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் வாய்வழி சான்றுகளை எடுத்துரைக்கிறது. இந்த பேரழிவினால் ஏற்பட்ட பாதிப்புகளையும் அதன் பின்விளைவுகளையும் இந்த நூல் பகுப்பாய்வு செய்கிறது.

சான்றுகள்[தொகு]

  1. "Suroopa Mukherjee". www.panmacmillan.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-17.
  2. "HINDU COLLEGE University Of Delhi". www.hinducollege.ac.in. Archived from the original on 2020-06-28. பார்க்கப்பட்ட நாள் 2021-03-17.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரூபா_முகர்ஜி&oldid=3555127" இலிருந்து மீள்விக்கப்பட்டது