சுருள் பாக்டீரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுருள் பாக்டீரியா (Spiral bacteria) என்பது சுருள் வடிவத்தில் உள்ள பாக்டீரியா ஆகும். தடி, மற்றும் கோளவுயிரியுடன்[1][2] சேர்ந்து நிலைக்கருவிலியின் பெரும் எண்ணிக்கையினை உருவாக்குகிறது. சுழல் பாக்டீரியாவை ஒரு உயிரணு ஒன்றில் சுருள்களின் எண்ணிக்கை, உயிரணு தடிமன், உயிரணு நெகிழ்வுத்தன்மை மற்றும் இயக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் மேலும் வகைப்படுத்தலாம். இரண்டு வகையான சுழல் உயிரணு, இசுபைரில்லம் மற்றும் இசுபைரோசீட் எனப் பிரிக்கப்படுகின்றன. இசுபைரில்லம் வெளிப்புற கடினமான கசையிழையுடனும், இசுபைரோசெட்டுகள் உட்புற கசையிழையுடன் உள்ளன.[3]

சுருளியுயிரி (இசுபைரில்லம்)[தொகு]

காம்பிலோபாக்டர் ஜெஜூனி என்பது பாக்டீரியா உணவு தொடர்பான இரைப்பை குடல் நோயின் பொதுவான நோய்க்கிருமியாகும்.

சுருளியுயிரி என்பது சுழல் மாறுகளைத் தாங்க வல்ல பாக்டீரியமாகும். இது கிராம்-எதிர் பாக்டீரியா மற்றும் வெளிப்புற கசையிழையிழையினைக் கொண்டுள்ளது.[3] எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

  • இசுபைரில்லம் இனத்தைச் சேர்ந்தவை
  • கேம்பிலோபாக்டர் ஜெஜூனி போன்ற கேம்பிலோபாக்டர் சிற்றினங்கள், கேம்பிலோபாக்டீரியோசிஸை ஏற்படுத்தும் உணவில் பரவும் நோய்க்கிருமி
  • ஹெலிகோபாக்டர் பைலோரி போன்ற ஹெலிகோபாக்டர் சிற்றினங்கள், வயிற்றுப் புண்களுக்குக் காரணமான பாக்டீரியாக்கள்

இசுபைரோகீட்டுகள்[தொகு]

மெல்லிய இசுபைரோசீட் திரிப்போனீமா பாலிடம் பாக்டீரியா, சிபிலிசு நோய்க் காரணி, 400 மடங்கு பெரிதாக்கப்பட்டுள்ளது.

சுருளிப்பாக்டீரியம் என்பது மிக மெல்லிய, நீளமான, நெகிழ்வான, சுருள் பாக்டீரியா ஆகும். இது வெளிப்புற சவ்வுக்குள் உள்ள பெரிப்ளாஸ்மிக் எனும் கசையிழைகள் மூலம் நகரும்.[3] இவை இசுபைரோகீட்சு என்ற தொகுதியை உள்ளடக்கியது. இவற்றின் உருவவியல் பண்புகள் காரணமாக, இசுபைரோகீட்டுகள் கிராம்-சாயமேற்றல் கடினமாக உள்ளது. இனால் இவற்றை இருண்ட புல நுண்ணோக்கி அல்லது வார்தின்-இசுடாரி சாயம் பயன்படுத்திக் காணலாம்.[4] இந்த வகைப் பாக்டீரியாக்களுக்கு உதாரணம்:

  • லெப்டோசுபைரா சிற்றினங்கள், இது லெப்டோஸ்பிரோசிஸ் (மென்சுருளி நோய்) நோயினை ஏற்படுத்துகிறது.
  • போரெலியா பர்க்டோர்பெரி போன்ற பொரெலியா சிற்றினங்கள், லைம் நோயை உண்டாக்கும் உண்ணியினால் பரவும் பாக்டீரியம்
  • திரிப்போனீமா பாலிடம் போன்ற திரிப்போனீமா சிற்றினங்கள், சிபிலிசு உட்பட திரிப்ரெபோனேமாடோஸை ஏற்படுத்தும் துணையினங்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. Csuros, Maria; Csuros, Csaba (1999). Microbiological Examination of Water and Wastewater. Boca Raton, Florida: CRC Press. பக். 16–17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781566701792. 
  2. Young, Kevin D. (September 2006). "The Selective Value of Bacterial Shape". Microbiology and Molecular Biology Reviews 70 (3): 660–703. doi:10.1128/MMBR.00001-06. பப்மெட்:16959965. 
  3. 3.0 3.1 3.2 Talaro, Kathleen (2007). Foundations in Microbiology (6th International ). McGraw-Hill. பக். 108–109. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0071262323. https://books.google.com/books?id=4hhgYEJZfisC&q=spirillum%20and%20spirochete&pg=PA108. பார்த்த நாள்: 11 September 2017. 
  4. Humphrey, Peter A.; Dehner, Louis P.; Pfeifer, John D., தொகுப்பாசிரியர்கள் (2008). "Chapter 53: Histology and histochemical stains". The Washington Manual of Surgical Pathology. Philadelphia: Lippincott Williams & Wilkins. பக். 680. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780781765275. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுருள்_பாக்டீரியா&oldid=3804805" இலிருந்து மீள்விக்கப்பட்டது