சுயகதிர் படம்
Appearance
சுயகதிர் படம் என்பது கதிர்படத்தாளில் பதிவு செய்யப்பட்ட படிமமாகும். கதிர்வீச்சு, படம் எடுக்கப் பயன்படுத்தப்படும் பொருளிலிருந்தே வெளிப்படுவதால் இப்பெயர் பெற்றது. இப்பெருள் ஒரு சிறிய திசுவின் வெட்டப்பட்ட மெலிலிய தகடுபோன்ற பகுதியாகும். இத்திசு முன்பே கதிரியக்கமுடைய குறீயி கதிர்தனிமத்தினை ஏற்றுள்ளது. இது ஊசி மூலமோ அல்லது வாய் வழியாகவோ ஏற்கப்பட்டு இருக்கும். எளிமையாக, கதிரியக்கப் பொருட்களின் இருப்பினைக் காட்டும் படமாகும். இங்கு படம் எடுக்கப்பட வேண்டிய பொருள் நேரடியாக படத்தாளின் மீது வைத்து படம் எடுக்கப்படுகிறது. உரங்கள் பயிர்களில் ஏற்கப்படுவதை சுய கதிர் படம் எடுப்பதன் மூலம் ஆயப்படுகிறது. இதனை புதிய தளிர்களும் இலை நரம்புகளும் தெளிவாகக் காட்டுகின்றன.