சுமந்த பருவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமந்த பாருவா

சுமந்த பருவா (Sumanta Baruah) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கேலிச்சித்திர வரைஞர் ஆவார். இவரது கேலிச்சித்திரங்கள் தற்போதைய அறிவியல், [1] அறிவியல் நிருபர், இரெசனன்சு, [2] விக்யான் இயெயூட்டி, திரிசுட்டி, சத்சோரி, அசாம் சயின்சு சொசைட்டி செய்தி இதழ், பிராந்திக்கு, கோனிட் சோரா, எனசோரி மற்றும் சாகிட்யா.ஆர்கு ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளன. இவரது கேலிச்சித்திரங்கள் இரண்டு பன்னாட்டு கேலிச்சித்திர திருவிழாக்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன: 2006 ஆம் ஆண்டில் கிரீசு நாட்டில் நடைபெற்ற 3 ஆவது ரோட்சு பன்னாட்டு கேலிச்சித்திரக் கண்காட்சியும் ஈரான் நாட்டில் நடைபெற்ற பன்னாட்டு கேலிச்சித்திர திருவிழாவும் அவ்விரண்டு திருவிழாக்களாகும்.

படைப்புகள்[தொகு]

அறிவியல், சுற்றுச்சூழல், கணிதம், அரசியல் மற்றும் சமூகம் என பல்வேறு தலைப்புகளில் சுமந்த பரூவா கேலிச்சித்திரங்களை வரைகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமந்த_பருவா&oldid=3758099" இலிருந்து மீள்விக்கப்பட்டது