உள்ளடக்கத்துக்குச் செல்

சுப்ரதா ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுப்ரதா ராய் (10 சூன் 1948) என்பவர் சகாரா இந்தியா பரிவார் என அறியப்படும் நிறுவன முதலாளி. இந்தியப் பெரும் தொழில் குழுமத் தலைவர் ஆவார்.[1] இவர் பிகாரில் பிறந்த வங்காளி. 10 ஆற்றல் வாய்ந்த மனிதர்களில் ஒருவர் என இந்தியா டுடே இதழ் இவரைத் தேர்ந்தெடுத்தது.

கொல்கத்தா பள்ளியில் பயின்ற பின்னர் கொரக்பூர் அரசு தொழில்நுட்ப நிலையத்தில் எந்திரவியல் கற்றார்.

இவரது சகாரா இந்தியா பரிவார் என்னும் பெருங் குழுமம் இலண்டனில் உள்ள விடுதியையும் நியூயார்க்கில் உள்ள விடுதியையும் வாங்கியது. நில விற்பனை, விளையாட்டு, பொழுதுபோக்கு, செய்தித்தாள், விடுதிகள், சில்லறை வணிகம் போன்ற துறைகளில் சுபத்ரா ராயின் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

24000 கோடி ரூபாய் பணம் முதலீட்டார்களுக்கு திருப்பித் தராமையால் உச்சநீதி மன்றம் 2014 ஆம் ஆண்டில் பிப்பிரவரி 26 இல் சுபத்ரா ராய்க்கு சிறைத் தண்டனை வழங்கியது. எனவே திகார் சிறையில் சுபத்ரா ராய் தண்டனை அனுபவித்து வருகிறார்.[2]

மேற்கோள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப்ரதா_ராய்&oldid=2711995" இலிருந்து மீள்விக்கப்பட்டது