சுபர்ணா பக்சி கங்குலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபர்ணா பக்சி கங்குலி
தேசியம் இந்தியா
பணிசுற்றுச்சூஶல் ஆர்வலர் & விலங்குகள் நல ஆர்வலர்
அறியப்படுவதுநாரி சக்தி விருது விருது பெற்றவர்

சுபர்ணா பக்சி கங்குலி (Suparna Baksi Ganguly) ஓர் இந்திய ஆர்வலரான இவர், விலங்குகள் குறிப்பாக யானைகள் சிறைபிடிக்கப்படுவதில் அக்கறை கொண்டுள்ளார். இவரது இப்பணிக்காக இந்தியாவில் பெண்களுக்கான மிக உயர்ந்த விருதான நாரி சக்தி விருது 2016இல் இவருக்கு வழங்கப்பட்டது.

பணிகள்[தொகு]

1991 ஆம் ஆண்டில் பெங்களூரில் நிறுவப்பட்ட காம்பாசியன் அன்லிமிடெட் பிளஸ் ஆக்சன் (கியூபா) என்ற நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். பின்னர், நிறுவனத்தின் அறங்காவலராகவும் அதன் செயலாளராகவும் ஆனார். இந்த அமைப்பு குரங்குகள், பாம்புகள், பறவைகள் மற்றும் பிற வனவிலங்குகளை மீட்டு புனர்வாழ்வளிக்கும் நான்கு மையங்களை இயக்கி வந்தது. [1]

1999ஆம் ஆண்டில் [2] இவர் வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை இணைந்து நிறுவி அதன் கௌரவத் தலைவரானார். [3]

சுபர்ணா கங்குலி 2013ஆம் ஆண்டில் யானைகள் தொடர்பான இந்தியாவின் பணிக்குழுவில் பணியாற்றினார். இந்தியாவில் யானைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. ஆனால் அவை இந்தியாவில் அதிகம் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், சிறைபிடிக்கப்பட்டுள்ள சுமார் 4,000 விலங்குகள் மற்றும் "கிட்டத்தட்ட அனைத்தும்" சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளன என்று இவர் குறிப்பிடுகிறார். யானைகள் கயிறு இழுக்கும் போட்டி, யானைப் போர் அல்லது வர்ணம் பூசப்பட்டு சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதில் பலர் ஈடுபட்டுள்ளனர். இந்திய மக்களின் பாசத்தில் யானைகளுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு என்று இவர் குறிப்பிடுகிறார். [4] யானைகளை சிறைபிடிப்பது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்குமாறு 2016 ஆம் ஆண்டில் வனவிலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. <[3]

2019ஆம் ஆண்டில் பாரம்பரியமான ராஜஸ்தான் திருவிழாவில் யானைகள் வர்ணம் பூசப்பட்டு, சிறந்த ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கான போட்டிகளை இவர் கடுமையாக எதிர்த்தார். இதனால் திருவிழா நிறுத்தப்பட்டது. யானைகளுக்கு வர்ணம் பூசப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் விலங்கு உரிமை ஆர்வலர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தின. சிலர் இது ஒரு பாரம்பரியம் என்ற அடிப்படையில் ஆதரித்தனர். ஆனால் பாரம்பரியத்தை விட விலங்கு உரிமைகள் முக்கியம் என்று இவர் பதிலளித்தார். [5]

விருது[தொகு]

மார்ச் 2016 இல் இவர் புது தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி அவர்களால் இவருக்கு இந்தியாவில் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான நாரி சக்திவிருது வழங்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்ததுடன், அத்துறையின் அமைச்சர் மேனகா காந்தியும் கலந்து கொண்டார். மேலும் ஒவ்வொரு வெற்றியாளரையும் "பெண் சக்தி" விருது என்று அவர் ஒரு உத்வேகமாக அடையாளம் காட்டினார். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "President Pranab Mukherjee presented 2015 Nari Shakti awards". Jagranjosh.com. 2016-03-09. பார்க்கப்பட்ட நாள் 2020-07-07.
  2. "Board of Trustees". helpanimalsindia.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-07.
  3. 3.0 3.1 "Optimism As Fate Of India's Captive Elephants Hangs In Balance". HuffPost Canada (in ஆங்கிலம்). 2016-09-29. பார்க்கப்பட்ட நாள் 2020-07-07.
  4. "Painted Elephants". Magazine (in ஆங்கிலம்). 2013-08-01. பார்க்கப்பட்ட நாள் 2020-07-08.
  5. "Czy one są szczęśliwe? Malowanie i przystrajanie słoni to tradycja festiwalu w Radżastanie [GALERIA]". www.national-geographic.pl (in போலிஷ்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-20.
  6. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபர்ணா_பக்சி_கங்குலி&oldid=3131079" இலிருந்து மீள்விக்கப்பட்டது