சுதா சேஷய்யன்
சுதா சேஷய்யன், (பிறப்பு:25 செப்டம்பர் 1961) [1]சென்னை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நான்கு ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் உடற்கூற்றியல் மருத்துவப் பேராராசிரியாகவும், பதிவாளராகவும் பணியாற்றியவர். இவர் மருத்துவக் கல்வியாளரும், தமிழ் ஆன்மீக இலக்கியப் பேச்சாளரும் ஆவார். சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 10-வது துணைவேந்தராக சுதா சேஷய்யன், 31 டிசம்பர் 2018 அன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தால் நியமிக்கப்பட்டார்.[2] 30 டிசம்பர் 2021 அன்று சுதா சேஷய்யன் பதவி ஓய்வு பெறும் நிலையில், தமிழக ஆளுநர் ஆர். என். ரவி ஓராண்டுக்கு பதவி நீட்டித்து உத்தரவிட்டார்.[3] [4] சுதா சேஷய்யன் நான்கு ஆண்டுகள் துணைவேந்தராக பணியாற்றிய பின் 30 டிசம்பர் 2022 அன்று பணி ஓய்வு பெற்றார்.[5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ முன்னாள் துணைவேந்தர்கள்,தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
- ↑ எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் நியமிக்கப்பட்டுள்ளார்
- ↑ சுதா சேஷய்யன் பதவி நீட்டிப்பு
- ↑ எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் பதவிக்காலம் நீட்டிப்பு
- ↑ எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணைவேந்தர் சுதா சேஷய்யன் ஓய்வு