சுண்டு முத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீந்துதல்
புளிய முத்துகளை ஒன்றை ஒன்றால் சுண்டுதல்

சுண்டு முத்து என்பது சிறுமியர் ஆடும் விளையாட்டு. இது சிறுமியரின் கைத்திற விளையாட்டு.

இருவர் சம எண்ணிக்கையில் புளியங்கொட்டைகள் வைத்துக்கொள்வர். அவற்றை முத்துகள் என்பர்; ஆள் மாறி மாறி விளையாடுவர். ஒருவர் தம்மிடமுள்ள முத்துகளில் கொஞ்சம் அள்ளித் தரையில் விசிறுவார். கெட்டியான தரை இதற்குப் பயன்படுத்தப்படும்.

தரையில் கிடக்கும் முத்துகளுக்கு இடையில் தன் சுண்டு விரலால் கீந்துவர். கீந்தும்போது எந்த முத்தும் அலுங்கக் கூடாது. அலுங்கினால் அலுங்கிய முத்தை எதிராளி எடுத்துக்கொள்ளலாம். கீந்திய பின்னர் ஒரு முத்தை மற்றொரு முத்தால் சுண்டி இரண்டு முத்துகளையும் தனதாக்கிக்கொள்ளலாம். சுண்டும்போது இரண்டு முத்துகளின் மேல் பட்டால் இரண்டு முத்துகளையும் எதிராளி எடுத்துக்கொள்வார்.

மேலும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுண்டு_முத்து&oldid=983187" இலிருந்து மீள்விக்கப்பட்டது