உள்ளடக்கத்துக்குச் செல்

சுசான் நைபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுசான் நைபர் (Susan Niebur) (பிறப்பு:1973) ஓர் அமெரிக்கக் கோள் அறிவியலாளர் ஆவார். இவர் அறிவியலில் பெண்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடுபவர். மார்பகப் புற்று பற்றிய வலைப்பூ ப்திவாளரும் ஆவார்.[1]:{{{3}}}[2]:{{{3}}}

வாழ்க்கை

[தொகு]

நைபர் ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து 1995 இல் இயற்பியலில் தன் இளவல் பட்டத்தைப் பெற்றார். இவர் புனித உலூயிசில் உள்ள வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார். பிறகு இவர் நாசாவில் 2001 இல் ஓர் அக ஆய்வாளராகச் சேர்ந்துள்ளார். பிறகு 2003 இல் நாசா கண்டுபிடிப்புத் திட்ட அறிவியலாளர் ஆனார். பின்னர் நாசாவில் இருந்து 2006 இல் பணிவிலகி அதுமுதலாக அறிவுரிஞராகப் பணிபுரிந்து வருகிறார்.[1]:{{{3}}} இவருக்கு 2007 இல் மார்பகப் புற்று உள்ளதாகக் கண்டறியப்பட்டது.[3]:{{{3}}} இவர் 2012 பிப்ரவரி 6 இல் அப்புற்றால் இறந்துவிட்டார்.[4]:{{{3}}}

பங்களிப்புகள்

[தொகு]

நைபர் தன் மாணவப் பருவ்த்திலேயே அமெரிக்க இயற்பியல் கழகப் பட்ட மேற்படிப்பு மாணவர் பேரவையையும் தேசிய முனைவர் அளக்கைத் திட்டத்தையும் நிறுவியதோடு தேசியப் பட்ட மேற்படிப்புத் தொழில்முறைக் கழகத் தலைவரும் ஆனார். நாசாவில் இவர் தொடக்கநிலை ஆய்வு வாழ்க்கைப்பணி நல்கையையும் கோள் அறிவியலாளருக்கான பணிப்பட்டறையையும் உருவாக்கினார் இவர் 2008 இல் "கோள் அறிவியலில் மகளிர்" எனும் வலைப்பூவைத் தொடங்கினார்.[1]:{{{3}}} மேலும் இவர் பரவலாகப் படிக்கப்பட்ட, " நடைகுழவியர் கோள்" எனும் வலைப்பூவையும் தொடங்கினார்.[4]:{{{3}}}[5]:{{{3}}}

தகைமைகள்

[தொகு]

இவரது கோள் அறிவியல் ஆய்வு, தேட்டப் பணிகளுக்காக அமெரிக்க வானியல் கழக மாசுர்சுகி விருது இவர் இறந்த பிறகு 2012 இல் வழங்கப்பட்ட்து 2012.[6]:{{{3}}}

113394 நைபர் எனும் சிறுகோள் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.[7]:{{{3}}}

கோள் அறிவியல் மகளிர் ஆண்டுக் கூட்டம், சுசான் நைபர் மகளிர் கோள் அறிவியல் ஒருங்கிணைப்பு நிக்ழ்வு என வழங்கப்படுகிறது.[8]:{{{3}}}

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Susan Niebur 1973–2012, American Astronomical Society
  2. Lakdawalla, Emily (February 8, 2012), In memory of Susan Niebur, The Planetary Society
  3. Renkl, Margaret (July 8, 2008), Fighting the cancer a mammogram can't catch, CNN
  4. 4.0 4.1 "Mom blogger Susan Niebur loses battle with cancer", Today, February 7, 2012
  5. D'Arcy, Janice (February 7, 2012), "Susan Niebur, the Toddler Planet hero, friend and mother", Washington Post
  6. 2012 Prize Recipients, American Astronomical Society, பார்க்கப்பட்ட நாள் 2020-06-07
  7. "113394 Niebur", JPL Small-Body Database, பார்க்கப்பட்ட நாள் 2020-06-07
  8. Singer, Kelsi (February 26, 2019), "Announcing the 11th Annual Susan Niebur WiPS Networking Event – LPSC 2019", Women in Planetary Science

வெளி இணைப்புக்ள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுசான்_நைபர்&oldid=3949934" இலிருந்து மீள்விக்கப்பட்டது