சுக்கிரலோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுக்கிரலோசு (Sucralose) என்பது ஒரு செயற்கை இனிப்பூட்டி. உட்கொள்ளும் சுக்கிரலோசின் பெரும்பகுதி உடலுள் உடைக்கப்படுவது இல்லை ஆதலால், இது மிகக் குறைவான கலோரிப் பெறுமானம் கொண்டது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இது E955 என்னும் E எண்ணாலும் அறியப்படுகிறது. சாதாரணமாக "மேசைச் சர்க்கரை" எனப்படும் சுக்கிரோசிலும் இது 320 முதல் 1000 மடங்கு இனிப்புத்தன்மையும், சக்கரினை விட இரண்டு மடங்கு இனிப்புத்தன்மையும், அசுப்பார்டேமை விட மூன்று மடங்கு இனிப்புத்தன்மையும் கொண்டது. இது கூடிய வெப்பத்தையும், பல்வேறு pH நிலைமைகளையும் தாங்கக்கூடியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுக்கிரலோசு&oldid=2225246" இலிருந்து மீள்விக்கப்பட்டது