சீவுளி
Jump to navigation
Jump to search
மரவேலையில் சீவுளி அல்லது இழைப்புளி (ஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது மரத்தை மட்டமாக்கவும் சீராக்கவும் ஒல்லியாக்கவும் பயன்படும் ஓர் உளி பொருத்திய கருவி ஆகும். இதனை மரத்தின் மேல் வைத்து இழைக்க அதில் குறிப்பிட்ட கோணத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் வள்ளேடு (angular blade) அல்லது கோண உளி மரத்தின் மேற்பரப்பை இழைக்கும். எவ்வளவு தடிப்பாக இழைக்க வேண்டும் என்பதை வள்ளேட்டின் கோணநிலையை மாற்றிப் பெற்றுக் கொள்ளலாம்.