சீரான வள அடையாளங்காட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சீரான வள அடையாளங்காட்டி(Uniform Resource Identifier (URI)) என்பது ஒரு வளத்தை அடையாளம் காட்ட பயன்படுத்தப்படும் எழுத்துக்களால் ஆனா சரம் ஆகும்.[1] இவ்வாறு அடையாளப்படுத்துவதன் ஊடாக அந்த வளத்தின் உருவகிப்பு (representation) ஒன்றோடு ஊடாடுவதற்கு உதவுகின்றது. பெரும்பாலும் இணையம் ஊடாக அந்த வளத்தை அல்லது அந்த வளம் பற்றிய தகவலை அணுக அல்லது பெற இது பயன்படுகிறது. பரவலாக அறியப்பட்ட இணைய ta.wikipedia.org போன்ற இணைய முகவரிகள் ஒரு வகை சீரான வள அடையாளம்காட்டி ஆகும்.

ஆங்கில எழுத்துக்களை மட்டும் அல்லாமல் பன்மொழி எழுத்துக்களையும் பயன்படுத்தக்கூடியவாறு சீரான வள அடையாளங்காட்டி முறைமை அனைத்துலக வள அடையாளங்காட்டி முறை ஊடாக நீட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Uniform Resource Identifier (URI): Generic Syntax". ietf.org. January 2005. 5 செப்டம்பர் 2016 அன்று பார்க்கப்பட்டது.