சீயோன் தேவாலயம், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீயோன் தேவாலயம் தமிழ்நாட்டின் சென்னை மாநகரம், சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பழமையான தேவாலயம் ஆகும். இது சிந்தாதிரிப்பேட்டையின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகும். அமெரிக்க மிஷனரிகளால் கட்டப்பட்ட மிகப் பழமையான தேவாலயமும் இதுவேயாகும். 1847 ஆம் ஆண்டில் அமெரிக்க மிஷனரிகள் கோதிக் கட்டிடக்கலை பாணியில் இத்தேவாலத்தைக் கட்டமைத்தனர். இந்தத் தேவாலயத்தில் நகரத்தின் இரண்டாவது பழமையான மணி (Bell) உள்ளது.

கிறிஸ்தவத்தின் புராட்டஸ்டன்ட் பிரிவைப் பின்பற்றும் இத்தேவாலயம் தென்னிந்திய திருச்சபையின் மெட்ராஸ் மறைமாவட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ளது. இந்தத் தேவாலயத்தில் மணிக்கொரு வழிப்பாட்டுக்கூட்டமும், தினசரி தேவாலய சேவைகளும் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் அறுவடை திருவிழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கட்டிடக்கலை[தொகு]

கோதிக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இத்தேவாலயத்தில் நகரத்தின் இரண்டாவது பழமையான மணி இடம்பெற்றுள்ளது. கிறிஸ்தவ மிஷனரி சொசைட்டி தேவாலயத்தால் அனுப்பப்பட்ட இந்த மணி 1878 ஆண்டில் இத்தேவாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள ஜே வார்னர் & சன்ஸால் உருவாக்கப்பட்டதாக இம்மணியில் இடம்பெற்றுள்ள கல்வெட்டு பொறிப்பு குறிப்பிடுகிறது. [1]

தேவாலயத்தில் உள்ள பன்குழலி (Pipe Organ) 19 ஆம் நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தில் தயாரிக்கப்பட்டு 1895 ஆம் ஆண்டு இத்தேவாலயத்தில் நிறுவப்பட்டது. இந்த இசைக்கருவி பல ஆண்டுகளாக செயல்படவில்லை. 2006 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் கைவினைஞர்களைக் கொண்டு பழுதுபார்க்கப்பட்டது. [2]

வரலாறு[தொகு]

இத்தேவாலயம் சென்னையில் அமெரிக்க மிஷனரிகளால் கட்டப்பட்டதாகவும். நகரத்தின் பழமையான மணியைக் கொண்டுள்ளதாகவும் வரலாற்றாசிரியர் முத்தையா குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பிய அமெரிக்க மிஷனரி டாக்டர் ஜான் ஸ்கடர் மற்றும் ரெவ். மிரோன் வின்ஸ்லோ ஆகியோரால் சிறிய அளவில் இத்தேவாலயம் கட்டப்பட்டது. 1878 ஆம் ஆண்டில் இத்தேவாலயம் இலண்டனின் சர்ச் மிஷன் சொசைட்டிக்கு ரூ. 10,000 தொகைக்கு விற்கப்பட்டுள்ளது.[3]

இந்த தேவாலயம் 1734 ஆம் ஆண்டில் கவர்னர் ஜார்ஜ் மார்டின் பித் என்பவரால் நிறுவப்பட்டதாகவும் . அவர் பருத்தி துணி உற்பத்தி செய்வதற்காக கூம் நதி 230 நெசவாளர் குடும்பங்களை குடியமர்த்தியதாகவும் மற்றோரு செய்திக் குறிப்பு குறிப்பிடுகிறது. இந்த தேவாலயம் 2003 ஆம் ஆண்டில் 50 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டது.[1]

வழிபாட்டு முறைகள்[தொகு]

1862 ஆம் ஆண்டில் தேவாலயத்தின் இரண்டாவது பாதிரியாராக ரெவ. டபிள்யூ.டி.சத்தியநாதன் நியமிக்கப்பட்டார்..முப்பது ஆண்டுகள் சத்தியநாதன் பணியாற்றியதைத் தொடர்ந்து இவரது மருமகன் டபிள்யூ.டி. கிளார்க் பாதிரியாரானார். டபிள்யூ.டி. கிளார்க்கைத் தொடர்ந்து அவரது மகன் சாமுவேல் கிளாக்கும், சாமுவேல் கிளாக்கைத் தொடர்ந்து அவரது மகன் சுந்தர் கிளார்க்கும் இங்கு பாதிரியார்களாகப் பணியாற்றியுள்ளனர். இவ்வாறாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர், இத்தேவாலயத்தில் ஐந்து தலைமுறைகளாக இங்கு ஊழியம் செய்து வந்துள்ளனர். [3] தற்போது இத்தேவாலயம் தென்னிந்திய திருச்சபையின் மெட்ராஸ் மறைமாவட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. தேவாலயத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி - 8:30 மணி மற்றும் மாலை 5 மணி ஆகிய நேரங்களில் ஆராதனைகள் நடைபெறுகின்றன.. சனிக்கிழமைகளில் காலை 8:30 மணி மற்றும் மாலை 6 மணி.ஆகிய நேரங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகளில்.காலை 8:30 மணி மற்றும் மாலை 6 மணி.ஆகிய நேரங்களிலும் ஆராதனைகள் நடைபெறுகின்றன.[4] டிசம்பர் 24 ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, விருந்து மற்றும் மத சொற்பொழிவுகளுடன் முடிவடையும் எட்டு நாள் தேவாலயத் திருவிழா கிறிஸ்துமஸ் காலங்களில் கொண்டாடப்படுகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Bell that rang in Zion flock makes comeback Danie George The Times of India. December 8, 2006
  2. Century-old church pipe organ restored and rededicated The Hindu December 8, 2006
  3. 3.0 3.1 [Madras' first American Church] Muthiah, S. The Hindu April 18, 2018
  4. CSI Zion Church Zion Church, Chennai. 2014
  5. Carrol rounds schedule Zion Church, Chennai. 2014