சீனடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனடி
தோன்றிய நாடுஇலங்கை இலங்கை
உருவாக்கியவர்இலங்கை
ஒலிம்பிய
விளையாட்டு
இல்லை

இலங்கை (Cheena di, சிங்களம்: චීනාඩි) என்பது சீன சண்டைக் கலைகளிலில் இருந்து வந்த இலங்கை சண்டைக் கலையாகும். நாட்டார் வழக்கின்படி, இது 1600 வருடங்களுக்கு முன் தாங் துறவிகள் இலங்கைக்கு யாத்திரைக்கு செல்லும்போது கொண்டு வரப்பட்டது எனப்படுகிறது..[1]

இலங்கை முஸ்லீம்கள் தொன்று தொட்டு பாரம்பரியமாக பயிற்சி செய்கின்ற அல்லது பாதுகாத்து வருகின்ற தொன்மையான தற்காப்புக்கலை.

வரலாறு[தொகு]

இலங்கை முஸ்லீம்களிடத்தில் தற்போது இக்கலை பரவலாக காணப்பட்டாலும் இதன் தாயகமாக கருதப்படுவது திருகோணமலை மாவட்டத்திலிருக்கும் கிண்ணியா பிரதேசமும்,களுத்துறை மாவட்டத்திலிருக்கும் பேருவளை பிரதேசமுமாகும்.[சான்று தேவை] ஆய்வின்போது இரு பிரதேசங்கடளுக்கும் இரு வகையான வரலாறுகள் காணப்படுகின்றன.

கிண்ணியா[தொகு]

ஒரு காலகட்டத்தில் வியாபாரத்தில் சிறந்து விளங்கிய இலங்கை முஸ்லீம் மக்கள் இலங்கைக்கு வியாபாரத்திற்காக வந்த சீன வர்த்தகர்களிடமி ருந்து இக்கலையை கற்றனர். அதாவது இலங்கைக்கு வந்த சீன வர்த்தகர்கள் திருகோணமலை துறைமுகத்தை அண்மித்து காணப்பட்ட கிண்ணியாவில் தலத்தை அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் இவர்களிட ம் வர்த்தகம் செய்த முஸ்லீம் வியாபாரிகளும் கிண்ணியா வாழ் மக்களும் இக்கலையை கற்றனர். இதனாலேயே சீனடி என்று இக்கலை அழைக்கப்படுவதாகவும் சீனர்கள் தலம் அமைத்து வியாபாரத்தை முன்னெடுத்த இடம் இப்பொழுதும் "சீனாபே" என்றே அழைக்கப்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

பேருவளை[தொகு]

நாடி நரம்புகளை பிடித்து நோய்களை இனம்காண்பதிலும் நாடி நரம்புகளை தாக்கி உடலுறுப்புக்களை கட்டுப்படுத்துவதிலும் "யுனானி" போன்ற ஒருவகை மருத்துவக்கலையில் பிரசித்து பெற்றிருந்த முஸ்லீம்கள் கெச்சி மலையை அண்டி வாழ்ந்துகொண்டிருந்ததாகவும் அதே கால கட்டத்தில் வியாபார நிமித்தம் இலங்கை வந்த அதிகபடியான சீனர்கள் இங்கு தளம் அமைத்து வாழ்ந்ததாகவும் அந்த இடம் "சீீனக்குடா" என்று இன்னும் அழைக்கப்படுவதாகவும் இச்சீீனர்கள் மாணிக்க வியாபாரத்தில் முன்னெனியில் இருந்த இலங்கை முஸ்லீம் வர்த்தகர்களுக்கு இடையுறு செய்து மாணிக்க வர்த்தகத்தில் அவர்களது ஆதிக்கத்தை செலுத்த முற்பட்ட போது சீனர்களின் நாடி நரம்புகளைத்தாக்கி அவர்களின் அட்டகாசத்தை அக்கால முஸ்லீம் மக்கள் அடக்கியதாகவும் சீனர்களையே இக்கலையினால் தாக்கி அடக்கியதால்(அக்கால சீனர்கள் சண்டைக்கலையில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தனர் சீனர்கள் சண்டைக்கலையில் பிரசித்தி பெற்றிருந்தமையினாலேயே அவர்கள் வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டனர்) அவ்வாறான சீனருக்கே அடித்ததால் இக்கலை "சீனருக்கே அடி" என்று செல்லமாகவும் பெருமையாகவும் பேச்சு வழக்கில் அழைக்கப்பட்டட இக்கலை காலப்போக்கில் "சீனடி" என்று திரிபடைந்து அழைக்கப்படுவதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.

இவற்றையும் பார்க்க[தொகு]


உசாத்துணை[தொகு]

  1. "Galle Art Trail Festival – feast for mind and heart". The Island. 23 ஒக்டோபர் 2008 இம் மூலத்தில் இருந்து 2013-09-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130928013647/http://www.island.lk/2008/10/23/L2.pdf. பார்த்த நாள்: 20 மே 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனடி&oldid=3367525" இலிருந்து மீள்விக்கப்பட்டது