சீடர் பாயிண்ட் கேளிக்கைப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீடர் பாயிண்ட்
அமைவிடம்சான்டஸ்கி, ஒகையோ
பரப்பு364 ஏக்கர்கள் (0.569 sq mi; 1.47 km2)
Owned byசீடர் ஃபேர் எண்டர்டெயின்மெண்ட் கம்பெனி

சீடர் பாயிண்ட், ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்திலுள்ள கேளிக்கைப் பூங்கா ஆகும். 1870 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பூங்கா அமெரிக்காவின் இரண்டாவது பழமையான கேளிக்கைப் பூங்கா.[1] அமெரிக்காவின் ரோலர் கோஸ்ட் என அறியப்படும்[2] சீடர் பாயிண்டில் நிறைய பரபரப்பூட்டுகின்ற சவாரிகள் உள்ளன. உலக சாதனையாக 72 சவாரிகள் உள்ளன. இங்குள்ள 16 ரோலர் கோஸ்டர்கள், இப்பூங்காவை ரோலர் கோஸ்டர்கள் நிலையில் உலகில் மூன்றாவது தரத்தில் முன்னிறுத்துகின்றன. இதன் 16 வது ரோலர் கோஸ்டர் கேட் கீப்பர், மே மாதம் 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[3]

ஒவ்வொரு ஆண்டும் மே மாத நடுவிலிருந்து லேபர் தினம் (செப்படம்பர்) வரை சீடர் பாயிண்ட் தினமும் திறந்திருக்கும். அதன்பிறகு அக்டோபர் மாத இறுதிவரை அதாவது ஹாலோவின் வார இறுதிவரை வாரத்தின் இறுதிநாட்களில் மட்டுமே திறந்திருக்கும்.

200 அடிகள் (61 m) மேல் உயரமுள்ள ரோலர் கோஸ்டர் கொண்ட கேளிக்கைப் பூங்கா உலகிலேயே இது மட்டுமே. இந்த அற்புதமான் இடத்திற்கு ஒவ்வொரு வருடமும் முப்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகிறார்கள்[4]. செப்டம்பர், 2012 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த கேளிக்கைப் பூங்கா என்ற விருது பெற்று பதினைந்து வருஷமாக இந்த விருதை வாங்கிக் கொண்டிருக்கிறது[5]. அங்கு இருக்கும்போது தாமஸ் எடிசன் பிறந்த இடத்தைப் பார்க்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]