உள்ளடக்கத்துக்குச் செல்

சி. சி. என். ஏ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

CCNA என்பது சிஸ்கோ என்ற நிறுவனம் வழங்கும் சான்றளிப்பான சிஸ்கோ சான்றளித்த பிணைய கூட்டாளி என்ற சொற்தொடரின் சுருக்கப்பெயர் ஆகும். பேசும் போதோ அல்லது எழுதும் போதோ, இந்த சான்றளிப்பு சரியாக அதன் முதல் எழுத்துக்களைக்கொண்டு மட்டும் உருவான CCNA என்ற பெயரில்தான் குறிக்கப்படுகிறது, அதன் முழுப்பெயரில் அல்ல.

CCNA சான்றளிப்பு என்பது ஓர் இரண்டாவது மட்ட சிஸ்கோ தொழிற் துறை சான்றளிப்பாகும், அது ஒரு வேலை பழகும் நபருக்கு பிணையத்தைப்பற்றிய அடித்தள அறிவாற்றலை சுட்டிக்காட்டுகிறது. CCNA சான்றளிப்பு என்பது இடைநிலை-அளவு கொண்ட வழிச்செயலி மற்றும் நிலைமாற்றி பிணையங்களை நிறுவுதல், கட்டமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் தொல்லை துணிதல் போன்றவைகளை செயல்படுத்தும் திறமையுடன், தொலை தூரங்களில் உள்ள பெரும்பரப்பு வலையமைப்புகளை[1] இணைத்து செயற்படுத்தல் மற்றும் சரிபார்த்தல் போன்ற திறன்களை உறுதிபடுத்துகிறது.

CCNA சான்றிதழ் பெறுவதற்கு, 640-802 என்ற தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை பெறவேண்டும், அல்லது ICND1 640-822 மற்றும் ICND2 640-816 என்ற அளவில் இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை பெறவேண்டும். ICND1 தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஒருவருக்கு சிஸ்கோ சான்றளித்த நுழைவு பிணைய தொழில்நுட்ப வல்லுநர் (CCENT) என்ற சான்றிதழ் கிடைக்கப்பெறலாம். தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்கள் புள்ளிவிவர பகுப்பாய்வு முறையில் நிர்ணயிக்கப்படுகிறது மேலும் அவை மாற்றம் அடைந்து கொண்டே இருக்கலாம். தேர்வு முடிவுற்ற பிறகு, தேர்வர்கள் ஒரு மதிப்பெண் அறிக்கையைப் பெறுவார்கள் மேலும் அத்துடன் தேர்வுப்பிரிவினர் நடத்திய தேர்வில் கிடைத்த மதிப்பெண்கள் பற்றிய விவரங்களுடன் அந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான, புதிதாக நிர்ணயம் செய்த மதிப்பெண் அளவையும் குறிப்பிட்டு அறிக்கை வழங்கப்படுகிறது..

சிஸ்கோ நிறுவனம் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை வெளியிடுவதில்லை, ஏன் என்றால் தேர்வில் கேட்ட கேள்விகள் மற்றும் தேர்ச்சி பெறுவதற்கான மதிபெண்கள் இரண்டும் மாறுதல் அடையலாம்..[2]

CCNA செறிவுகள்[தொகு]

அக்டோபர் 2008 அன்று சிஸ்கோ மேலும் மூன்று செறிவுகளை கூட்டியது.[3] கூட்டாளி மட்டத்திலான இச்செறிவுகள், குரல், பாதுகாப்பு மற்றும் வயர்லெஸ் (கம்பியில்லா) நுட்பங்களில் ஒரு தனிமனிதனின் சிறப்புவாய்ந்த செயல்திறமைகளை உறுதி செய்கின்றன.

CCNA குரல்[தொகு]

சிஸ்கோ சான்றளித்த பிணைய கூட்டாளி குரல் (CCNA குரல்) சான்றிதழானது ஒரு குரல் சார்ந்த பிணையத்தை நிருவாகம் செய்வதற்கான கூட்டாளி மட்ட செயல்திறமையை ஒருவனிடம் உறுதிப்படுத்துகின்றன. சிஸ்கோ CCNA குரல் சான்றளிப்பு, குரல் தொழில்நுட்பத்தை சார்ந்த குரல் தொழில்நுட்ப நிருவாகி, குரல் பொறியாளர், மற்றும் குரல் மேலாளர் போன்ற தனிச்சிறப்பு வாய்ந்த பணிகளை மேற்கொள்வதற்கான அனைத்து சிறப்புத் திறமைகளையும் உறுதி செய்கின்றது. இணையவழி ஒலி பரிமாற்றம் (வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் ப்ரோட்டோகால்) (VoIP) தொழில்நுட்பம் சார்ந்த இணைய நெறிமுறை வழங்கும் தனியார் கிளைகளை ஒழுங்குபடுத்தும் செயல்பாடுகள் மூலமாக (IPபிரைவேட் பிரான்ச் எக்சேஞ்ச் (IP PBX) IP டெலிஃபோனி, ஹேண்ட்செட், அழைப்புக் கட்டுப்பாடு மற்றும் குரல்அஞ்சல்) போன்ற சேவைகளை வழங்குவதற்கான திறமைகளை வளர்ப்பதற்கு இந்த சான்றளிப்பு செல்வாக்களிக்கிறது.

CCNA குரல் தடம் இரு வேறுபட்ட தடங்களை கொண்டது:

 • CCNA குரல் சான்றளிப்பு நிறுவன தெரிவு (CCNA Voice Certification enterprise option) என்பது ஒரு நபரின் சிஸ்கோ ஒன்றுபடுத்திய தொடர்புகளுக்கான மேலாளர்]] 6.0 (CUCM 6.0) என்ற சான்றளிப்பு சார்ந்த திறமைகள் மற்றும் அறிவாற்றலை சோதிக்கிறது. இது எடுத்த்துக்காட்டாக அரசு சார்ந்த, பெரிய நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த தெரிவிற்கு, CVOICE #642-436 என்ற தேர்வில் பங்கேற்பது மிகவும் அவசியமாகும்.
 • CCNA குரல் சான்றளிப்பு வணிக தெரிவு (CCNA Voice Certification commercial option) ஒரு தனி நபரின் சிஸ்கோ அழைப்பு மேலாளர் எக்ஸ்ப்ரெஸ் (CME) மற்றும் சிஸ்கோ ஒருமைப்பாடு எக்ஸ்ப்ரெஸ் (CUE) தீர்வுகள் இரண்டு பிரிவுகளிலும், எடுத்துக்காட்டாக சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறுவனங்கள், அதாவது 2,000 க்கும் குறைவான பணியாளர்களை கொண்ட சில்லறை வணிகங்கள் மற்றும் சிறிய பள்ளிக்கூடங்கள் கொண்ட நிறுவனங்களின் மாவட்டங்களில் பயன்படுத்தக்கூடிய திறமைகள் மற்றும் அறிவாற்றலை மதிப்பீடு செய்து பார்ப்பதாகும். இந்த சிறப்புத்தன்மையை அடைவதற்கு, ஒரு தேர்வர் IIUC தேர்வு #640-460[4] என்ற தொகுப்பில் வெற்றி காண வேண்டும்.[4]

கம்பியால் இணைக்கப்படாத CCNA[தொகு]

CCNA வயர்லெஸ் (CCNA Wireless) என்ற தொகுப்பு ஒரு நபரின் கூட்டாளி அளவிலான வயர்லெஸ் (கம்பியில்லா) குறும்பரப்பு வலையமைப்புகள் (WLAN) கொண்ட அமைப்பின் கட்டமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் ஆதரித்தல் போன்ற திறமைகள் மற்றும் அறிவாற்றலை, குறிப்பாக சிஸ்கோவின் கருவிகளை பயன்படுத்தும் அமைப்புகளுக்காக மேம்படுத்துவதை, சான்றளித்து உறுதிபடுத்துகிறது. CCNA வயர்லெஸ் சான்றளிப்பு கொண்ட, இணைய தொழில் நெறிஞர்கள் சிஸ்கோ வயர்லஸ் பிணையத்திலுள்ள மிகவும் அடிப்படையான பிணையத்தை, SMB சேமிப்பு நெறிமுறைகளுடன் கூடிய நிறுவன பிணையத்துடன் ஆதரிக்கலாம். CCNA கம்பியில்லா தொகுப்பிற்கான பாடத்திட்டம் தகவல்கள் மற்றும் செய்முறை பயிற்சிகள் அடங்கியதாகும், மேலும் அவற்றின் மூலம் கட்டமைத்தல், கண்காணித்தல் மற்றும் தொல்லை துணிதல் போன்ற அடிப்படை செயல்பாடுகளை சிஸ்கோ கம்பியில்லா குறும்பரப்பு வலையமைப்புகள் (WLAN) சார்ந்த SMB மற்றும் நிறுவன பிணையங்களில் செயல்படுத்தும் பயிற்சிகள் கொண்டதாகும்.

இந்த சான்றளிப்பை பெறுவதற்கு, தகுதி வாய்ந்த தேர்வர்கள் 640-721 என்ற அளவில் IUWNE தேர்வில் வெற்றி காண வேண்டும்.[5]

CCNA பாதுகாப்பு[தொகு]

சிஸ்கோ சான்றளித்த பிணைய கூட்டாளி பாதுகாப்பு (CCNA Security) சான்றிதழ் சிஸ்கோ பிணையங்களை பாதுகாப்பதற்கு தேவையான கூட்டாளி-அளவிலான அறிவாற்றல் மற்றும் திறமைகளை சான்றளித்து உறுதிபடுத்துகிறது. CCNA பாதுகாப்பிற்கான சான்றளிப்புடன் கூடிய, ஒரு பிணைய தொழில் வினைஞர் ஒரு பாதுகாப்புடன் கூடிய கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், பிணையங்களுக்குண்டான மிரட்டல்கள் மற்றும் ஊறுபாடுகளைப்பற்றி நன்கு தெரிந்தவராகவும், மேலும் பாதுகாப்புக்குண்டான மிரட்டல்களை தணிப்பதற்கும் தேவையான திறமைகளை வெளிப்படுத்துபவராவர். CCNA பாதுகாப்பிற்கான பாடத்திட்டம் அடிப்படை பாதுகாப்பிற்கான தொழில் நுட்பங்களை வலியுறுத்துகிறது மேலும் பிணையத்திற்கான கருவிகளை நிறுவுதல், தொல்லை துணிதல் மற்றும் கண்காணித்தல் மூலமாக ஒருமைப்பாடு, நம்பகத்தன்மை, மற்றும் கருவிகள் மற்றும் தரவுகள் எப்போதும் கிடைக்கப்பெறுவது, மற்றும் சிஸ்கோ பயன்படுத்தி வரும் பாதுகாப்பு அமைப்பிற்கான தொழில் நுட்பத்தை செயல்படுத்தும் தகுதி போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.[6]

இந்த தேர்வானது தனது பாதுகாப்புக்கான கட்டமைப்பில் சிஸ்கோ நிறுவனம் பயன்படுத்தும் தொழில் நுட்பங்களில் கொண்டுள்ள தகுதியை சோதித்துப் பார்க்கிறது, எடுத்துக்காட்டாக சிஸ்கோ திசை காட்டிகள் மற்றும் நிலைமாற்றிகளை கவனித்துக் கொள்வதற்கான தகுதிகளை சோதித்துப்பார்ப்பது. அவற்றில் பிணையத்தின் கருவிகளை நிறுவுதல், தொல்லை துணிதல் மற்றும் கண்காணித்ததலுடன் CIA முக்கூற்றுத்தொகுதிகளை (நம்பகத்தன்மை, ஒருமைப்பாடு, மற்றும் கிடைக்குந்தகைமை) பேணுதல் ஆகியவை உள்ளடங்கும்.

இந்த சான்றளிப்பைப் பெறுவதற்கு, ஒரு தகுதி வாய்ந்த தேர்வர் 640-553 IINS என்ற அளவில் (சிஸ்கோவின் IOS பிணையத்திற்கான பாதுகாப்பை நிறுவுவதற்கான) சான்றளிப்பு தேர்வில் வெற்றி காணவேண்டும்.[7]

புதுப்பித்த சான்றளிப்பு[தொகு]

CCNA சான்றளிப்புகள் (அவற்றில் சிறப்புத் தெரிவுகளும் அடங்கும்) மூன்று வருட காலங்களுக்கு ஏற்புடை கொண்டவையாகும். திரும்பவும் புதுப்பித்த சான்றளிப்பு பெறுவதற்கு, ஒருவன் கீழ்கண்ட தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி காண வேண்டும்:

 • தற்போதுள்ள CCNA, CCDA, அல்லது ICND2 தேர்வு
 • தற்போதுள்ள CCNA செறிவுகளுக்கான தேர்வு (வயர்லெஸ், பாதுகாப்பு, அல்லது குரல்)
 • ஏதேனும் ஒரு தொழில் நெறிஞர்-அளவிலான தேர்வு (642-xxx பகுப்பை சார்ந்ததாக இருக்க வேண்டும்)
 • ஏதேனும் ஒரு சிஸ்கோ நிபுணர் சார்ந்த தேர்வு (விற்பனை நிபுணர் தேர்வை தவிர்த்து)
 • தற்போதுள்ள ஒரு CCIE அல்லது CCDE எழுதும் முறையிலான தேர்வு CCNA வழிகள் மற்றும் செறிவுகள்
 • சிஸ்கோ சான்றளித்த வலைத்தள தொழில் வினைஞர் (CCNP)

மேலும் காண்க[தொகு]

சிஸ்கோ தொழில்நுட்ப தேர்வுகள்

குறிப்புகள்[தொகு]

 1. "CCNA Certification". Cisco.com.
 2. "Certification Exam Policies". Cisco.com.
 3. "Cisco CCNA Certification Concentrations". Cisco.com.
 4. 4.0 4.1 "CCNA Voice - Career Certifications & Path".
 5. "CCNA Wireless - Career Certifications & Paths". Cisco.com.
 6. "CCNA Security Certification". Cisco.com. பார்க்கப்பட்ட நாள் 2009-08-08.
 7. "IINS Exam". Cisco.com. Archived from the original on 2012-12-03. பார்க்கப்பட்ட நாள் 2009-08-08.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சி._என்._ஏ&oldid=3553685" இலிருந்து மீள்விக்கப்பட்டது