சி. கேசவன்
சி. கேசவன் (23 மே 1891 - 7 சூலை 1969) என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி, மற்றும் நாராயணகுரு வின் சீடர் ஆவார். திருவாங்கூர் - கொச்சி சமஸ்தானத்தின் முதலமைச்சராக 1950-52 ஆண்டுகளில் இருந்தவர்.[1]
திருவாங்கூர் மாநிலத்தில் கொல்லம் அருகில் மையநாடு என்ற சிற்றுரில் ஈழவப் பெற்றோருக்குப் பிறந்தார். சிறீ நாராயண தர்ம பரிபாலனம் என்ற அமைப்பைத் தோற்றுவித்த பத்மநாபன் பல்பு என்பவரின் சமூக நலன் செயல்பாடுகள் இவருடைய கவனத்தை ஈர்த்தன. சி. கேசவன் பின் தங்கியிருந்த ஈழவ மக்களின் சமூகப் பொருளாதார நிலை மேம்படுவதற்கு செயல்பட்டார். இந்து மதத்தை விட்டு விலக விரும்பினார். நாத்திகராகவும் விளங்கினார்.
தனது தன் வரலாற்றை இரண்டு தொகுதிகளாக எழுதி வெளியிட்டார். மூன்றாம் தொகுதி எழுதி முடிக்க இயலாமல் இறந்து விட்டார். இவர் நினைவைப் போற்றும் வகையில் கொல்லம் நகராட்சிக் கூடம் ஒன்றுக்கு இவர் பெயரைச் சூட்டினார்கள்.
மேற்கோள்
[தொகு]- ↑ Kumar, Udaya (2009). "Subjects of New Lives". In Ray, Bharati (ed.). Different Types of History. Pearson Education India. pp. 322–323. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131718186.