சி. குட்டூர் பறவை ஓவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காணுயிர் பறவைகள்

சி. குட்டூர் பறவை ஓவியம் என்பது தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டனத்திற்கு அருகில் உள்ள சி. குட்டூர் என்ற ஊரில் உள்ள குன்றில் மேலுள்ள ஒரு குகையில் கண்டுப்படிக்கப்பட்டுள்ளது. கண்டறியப்பட்ட ஒரு பாறை ஓவியமாகும். வரலாற்று காலத்து முந்தைய பாறை ஓவியங்கள் தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதில் 90% ஓவியங்கள் கிருட்டிணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஓவியம் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தை சார்ந்த காணுயிர் பறவைகளின் பாறை ஓவியமாகும். இந்த ஓவியத்தை கண்டு பிடித்தவர் காவேரிப்பட்டணம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் உதவித்தலைமையாசிரியராக பணிப்புரியும் திரு. முருகன் ஆவார். இந்த ஓவியத்தை பற்றிய ஆய்வுக்கட்டுரை தொகுக்கப்பட்டு திரு. சுகவனமுருகன் அவரிகளால் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழத்தில் நடைபெற்ற அகில இந்திய தொல்லியல்த்துறை கருத்தரங்கில் ஆய்வு அறிக்கை சமர்பிக்கப்பட்டது.

மேற்கோள்[தொகு]

  • வரலாற்றில் தகடூர் - ஆசிரியர் பெயர் - டாக்டர் கோ.சாந்தலிங்கம்
  • கிருஷ்ணகிரி வரலாறு - ஆசிரியர் பெயர் திரு.சுகவன முருகன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._குட்டூர்_பறவை_ஓவியம்&oldid=3312568" இலிருந்து மீள்விக்கப்பட்டது