சி. எஸ். சந்திரிகா
சி. எஸ். சந்திரிகா | |
---|---|
![]() 2019 ஆம் ஆண்டில் சந்திரிகா | |
தொழில் | எழுத்தாளர் |
கல்வி | நுண்கலைகளில் முதுகலைப்பட்டம் |
கல்வி நிலையம் | காலிகட் பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | தோப்பில் ரவி விருது |
சி. எஸ். சந்திரிகா (C.S. Chandrika) இந்தியாவின் கேரளமாநிலத்தை சேர்ந்த மலையாள மொழி எழுத்தாளர் ஆவார். இவர் புனைகதை மற்றும் புனைகதை அல்லாத வகை ஆகிய இரண்டு வகையிலும் எழுதும் ஆற்றல் பெற்றவராவார். இவர் பெண்கள், மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய துறைகளில் அக்கரையுடன் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒரு சமூக விஞ்ஞானி, ஆர்வலர் மற்றும் கட்டுரையாளர் ஆவார்.
கல்வி[தொகு]
சந்திரிகா தாவரவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார் [1] இவர் மலையாள மொழி மற்றும் இலக்கியம் மற்றும் பெண்கள் ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் காலிகட் பல்கலைக்கழகத்தில் நுண்கலைகளில் முனைவர் பட்டம் பெற்றார். [2]
தொழில்[தொகு]
சந்திரிகா, புதுச்சேரி மகளிர் ஆய்வு மையத்தில் கற்பிக்கும் பணியாற்றினார். மேலும் பாலினம் மற்றும் மேம்பாட்டுத் துறையில் பரவலாக பணியாற்றியுள்ளார். இவர் சாகி மகளிர் வள மையம், கேரளாவுடன் தொடர்புடையவர். [3]
வெளியீடுகள்[தொகு]
சந்திரிகா கல்வி மற்றும் கற்பனை படைப்புகளை நூல்களாக வெளியிட்டார். இவர் ஆக்ஸ்போர்டு இந்தியா தொகுப்பான இருபதாம் நூற்றாண்டின் மலையாள தலித் எழுத்தின் தொகுப்பாசிரியர்களில் ஒருவராக இருந்தார்.[4] 2012 ஆம் ஆண்டில் க்ளெப்டோமேனியா என்ற கதைத் தொகுப்பிற்காக தோப்பில் ரவி விருதை வென்றார் [5] மதிப்புமிக்க முதுகுளம் பார்வதி அம்மா என்ற மற்றொரு விருது 2010 ஆம் ஆண்டில் இவரது ஆர்தவமுல்லா ஸ்த்ரீகள் என்ற கட்டுரைக்காக வழங்கப்பட்டது. மலையாளத்தின் கதகரிகளில் இவரது கதையுடன் இவரது நேர்காணல் வெளியிடப்பட்டது. இது பத்து முக்கிய மலையாள பெண் எழுத்தாளர்களைப் பட்டியலிட்டது. இவரது பல படைப்புகள் ஆங்கிலம், தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மொழிபெயர்ப்பு நூல்கள்[தொகு]
பிறா (இந்த நாவல் மாத்ருபூமி என்ற வார இதழில் வெளிவந்தது) [6]பூமியூடே பதகா [7] லேடீஸ் கம்பார்ட்மென்ட் [8] என்டேபச்சக்கரிம்வே [9]க்ளெப்டோமேனியா[10]ஆர்த்தவமுல்லா ஸ்த்ரீகள் (கட்டுரை) ஆகியவை சந்திரிகாவின் மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மலையாளப் பெண்ணிய எழுத்தாளராக இருந்த கே.சரஸ்வதி அம்மாவைப் பற்றி ஒரு தனி வரைவு நூலை கேரள சாகித்ய அகாதெமிக்காக எழுதி வெளியிட்டார். [11]
திருமணமின்றி இணைந்து வாழ்தல் பற்றிய கருத்து[தொகு]
திருமணமின்றி இணைந்து வாழ்தல் குறித்து 2018 மே மாதத்தில் உச்சநீதிமன்றம் நேர்மறையான கருத்தைத் தெரிவித்திருந்த போது எழுத்தாளராகவும், 23 ஆண்டுகளாக இவ்வாறான இணைந்து வாழ்தலில் தனது வாழ்வைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணாகவும் இவர் பின்வருமாறு தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார். “ஆண்களின் விருப்பத்திற்குத் தகுந்த வாழ்வை வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கும் திருமணத்தின் மீதான நம்பிக்கையின்மையின் காரணமாக நான் இவ்வாறான ஒரு வாழ்க்கை முறையினைத் தேர்ந்தெடுத்தேன். இவ்வாறான வாழ்க்கையில் ஒரு பெண் வன்முறையினைச் சந்திக்க நேரும் போது எளிதாக பந்தமில்லாத இந்த உறவிலிருந்து விலகி விடலாம். எந்த வித சட்டபூர்வமான இடையூறுகளும் இருக்காது. ஆனால், ஒரு பெண் பொருளாதார உறுதித்தன்மை இல்லாத போது இந்த மாதிரியான தெரிவினை நாடக்கூடாது. மேலும், குழந்தைகள் பிறந்து விட்டால் எந்த விதமான சட்டபூர்வமான உறுதிப்பாடும் இந்த முறையான வாழ்க்கையில் இருக்காது” என்பதைத் தனது கருத்தாகத் தெரிவித்திருந்தார். [12]
வரதட்சணை பற்றிய கருத்து[தொகு]
இவர் ஜுன் 2021இல் கேரளாவில் நடந்த வரதட்சணைக் கொடுமை மரணத்தைப் பற்றிக்கூறும் போது இவ்வாறான மரணங்கள் கோவிட் ஆபத்தை விடக் கொடுமையானவை என்றும், குடும்ப நல நீதிமன்றங்கள் விரைந்து பெண்கள் மீதான குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளை முடித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குடும்ப வன்முறையினை எதிர்கொள்ளும் பெண்கள் தவறான முடிவுகளுக்கு மாறாக உளவியல் வழிகாட்டுதல்களைப் பெற வேண்டும் என்றும் தனது பேட்டியில் கூறியுள்ளார்.[13]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "C. S. Chandrika". Mathrubhumi (ஆங்கிலம்). 2021-09-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-14 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Dr. C. S Chandrika » MSSRF CABC". www.mssrfcabc.res.in. 5 November 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-14 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Dr. C. S Chandrika » MSSRF CABC". www.mssrfcabc.res.in. 5 November 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-14 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Mainstreaming the subaltern". Frontline.in. 30 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "CS Chandrika bags Thoppil Ravi award, Kerala - Mathrubhumi English News Online". Mathrubhumi.com. 4 December 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ [1] பரணிடப்பட்டது 30 நவம்பர் 2014 at Archive.today
- ↑ "Bhoomiyude Pathaka : C.S. Chandrika : 9788126413720". www.bookdepository.com. 2019-03-14 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Ent̲e paccakkarimpē.
- ↑ Klept̲t̲ōmāniya. Ḍi. Si. Buks.
- ↑ 1967-, Candrika, Si. Es. (2011). Klept̲t̲ōmāniya. Kottayam: Ḍi. Si. Buks. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788126433025. இணையக் கணினி நூலக மையம்:772450133.
- ↑ {{Cite web|url=http://samyukta.info/site/node/57%7Ctitle=K. Saraswathiamma - sahithya Academy - Samyukta :: A Journal of Women's Studies|last=Deepu Balan|publisher=Samyukta.info|archive-url=https://web.archive.org/web/20141207023341/http://samyukta.info/site/node/57#%7Carchive-date=7 December 2014|access-date=30 November 2014}}
- ↑ May 21, Arya UR / TNN /; 2018; Ist, 00:00. "Will the licence to live-in spur a change?". The Times of India (ஆங்கிலம்). 2021-09-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Dir, News (2021-06-23). "Dowry harassment is more deadly than Kovid". Newsdir3 (ஆங்கிலம்). 2021-09-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-09-22 அன்று பார்க்கப்பட்டது.