சி.இ-20

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சி.இ-20 (C.E - 20 ) இஸ்ரோவால் முதல்முறையாக சொந்தத் தொழில்நுட்பத்தில் தயாரான தாழ்வெப்பப் பொறி. இதன் சோதனை ஓட்டம் மகேந்திரகிரி திரவ திட்ட இயக்க நிலையத்தில் டிசம்பர் 4-ம் தேதி வெற்றிகரமாக நடந்தது. இஸ்ரோவின் திட்டமான 640 டன் எடை கொண்ட ஜி. எஸ். எல். வி - எம்கே-3யை தாங்கிச் செல்லும் பொறியாகும்.[1]

வரலாறு[தொகு]

ஜி. எஸ். எல். வி. செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கான தாழ்வெப்பப் பொறிகளை ரஷ்யாவிடமிருந்து வாங்க இஸ்ரோ ஒப்பந்தம் செய்திருந்தது. அதன்படி ஏழு பொறிகளையும் வாங்கியது. இடையே அமெரிக்காவின் நெருக்கடியால் ஒப்பந்தம் ரத்தானது. அதனால், இந்தியா சொந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கத் தொடங்கியது. அதிக எடை கொண்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்காக திருவனந்தபுரம் அருகே வலியமலாவில் இருக்கும் திரவ இயக்க திட்ட மையத்தில் இது உருவானது .[1]

வடிவமைப்பு[தொகு]

இரு பக்கங்களிலும் தலா 200 டன் உந்துசக்தி கொடுக்கும் திட எரிபொருள் இன்ஜின், நடுவில் 110 டன் உந்துசக்தி கொடுக்கும் திரவ எரிபொருள் இன்ஜின் என இந்த விண்கலம் வடிவமைக்கப்படுகிறது. விண்கலத்தின் எடை அதிகம் என்பதால் அலைக்கற்றை பரிமாற்ற சாதனங்களை கூடுதலாக விண்ணுக்கு அனுப்ப முடியும். தொலை உணர்வு செயற்கைக்கோளான இது 36 ஆயிரம் கி.மீ. உயரத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்படும்.[1]

சோதனை ஓட்டங்கள்[தொகு]

மகேந்திரகிரியில் 2013 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் முதல்கட்டமாக 3.5 வினாடிகள் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதில் விஞ்ஞானிகள் முழு திருப்தி அடைந்தனர். தொடர்ந்து, இன்ஜினின் மிக முக்கியப் பகுதியான உந்துகை அறை '(thrust chamber)' எனப்படும் இன்ஜின் நாசிலில் திரவ ஹைட்ரஜனும் திரவ ஆக்ஸிஜனும் சீராக வழங்கப்பட்டு, நிலைநின்று எரிகிறதா என்கிற சிக்கலான சோதனை ஓட்டம் டிசம்பர் 4, 2013 -ம் தேதி மொத்தம் 20 வினாடிகள் நடத்தப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 டி.எல்.சஞ்சீவிகுமார் (8 திசம்பர் 2013). "இஸ்ரோவின் கனவு இன்ஜின் ‘சிஇ–20’ தயார்". பார்த்த நாள் 8 திசம்பர் 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி.இ-20&oldid=1568835" இருந்து மீள்விக்கப்பட்டது