சிவாட்டகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவாட்டகம் என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் அரசனாகவும், புலவராகவும் விளங்கிய அதிவீரராம பாண்டியர் என்பவரால் இயற்றப்பட்ட காசி காண்டம் என்னும் நூலில் வரும் ஒரு பகுதி. இது பல்வேறு சிறப்பு கருதித் தனி நூலாக அச்சிட்டு வெளிவந்துள்ளது. எட்டுப் பாடல்களைக் கொண்ட நூல் 'அட்டகம்' எனப்படும். சிவபெருமானைப் போற்றும் பாடல்கள் எட்டு கொண்டிருப்பதால் இதனைச் சிவாட்டகம் என்றனர். இந்த எட்டுப் பாடல்களைப் போற்றி வணங்கினால் பிள்ளைப்பேறு கிட்டும் என நம்பினர்.

இதில் உள்ள பாடல்களில் ஒன்று (எடுத்துக்காட்டு) [1]

அரு உருவாய், ஏகமாய்க், குணம் குறிகள் எவையும் இன்றி, அவசம் ஆகி
நிருமலமாய், எவ்வுயிர்க்கும் உயிராகிச், சுடரொளியாய் நித்தம் ஆகி
கருது அரிய ஆனந்தக் கடல் ஆகி மெய்ஞ்ஞானக் கனியாய் நின்ற
வரத நினது அடிக் கமலம் மனத்து இருத்திக், கொழுமலர் தூய் வழுத்தல் செய்வாம்.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம் & மூன்றாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. பாடல் அறுசீர் விருத்தம். இது பொருள் விளங்கும்படி சொற்பிரிப்பு செய்யப்பட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவாட்டகம்&oldid=1429247" இலிருந்து மீள்விக்கப்பட்டது