சிவனிணைந்த பெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவனிணைந்த பெருமாள் என்பவர் இந்து சமய நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார்.[1] அரசகுலத்தினைச் சேர்ந்த சிவனிணைந்த பெருமாள், வண்ணார குலத்தினைச் சேர்ந்த சின்னணைஞ்சியுடன் வாழ்ந்தமையால் கௌரவக் கொலை செய்யப்பட்டார். அவர் இறந்தபின்பு மக்களுக்கு ஆவியாக வந்து தொல்லை தந்தமையால், அவரை கடவுளாக வழிபடுகின்றனர்.

தொன்மம்[தொகு]

சிவனிணைந்த பெருமாள் அரசகுலத்தினைச் சேர்ந்தவர். சின்னணைஞ்சி எனும் வண்ணார் இனப் பெண் மீது காதல் கொண்டு, தன் காதலை அவளிடம் தெரிவித்தார். ஆனால் அப்பெண் அதற்கு இணங்கவில்லை. சவுண்டப்பன் எனும் நண்பனின் துணையோடு மாந்தீரிகம் செய்து அவளை வசியப்படுத்தினான். அவளை குகையொன்றில் வைத்து இல்லறம் நடத்தினான். பெண்ணைக்காணாது அரசனிடம் புகார் தந்தனர். அதோடு அரசனுடைய மகன் மீதுதான் தங்களுக்கு சந்தேகம் என்றும் கூறினர். அரசன் கோபம் கொண்டு இளவரசரைத் தேட உத்தரவிட்டார். வீரர்களுடன் சென்ற அமைச்சர் குகையில் இருந்த சிவனிணைந்த பெருமாளிடம் நடந்ததை கூறி அப்பெண்ணை விட்டுவிட்டு வரும்படி கூறினார். ஆனால் சிவனிணைந்த பெருமாள் மறுத்துவிட்டார்.

அச்செய்தி கேட்டு மாமாவான சீவலமாடன் வந்து இளவரசருடன் பேசினான். ஆனால் அதற்கும் சிவனிணைந்த பெருமாள் மறுத்துவிடவே. குலம் பாராது காதல் கொண்டமைக்காக வெட்டிக் கொல்ல உத்தரவிட்டான். வீரர்களுடன் சண்டையிட்டு களைத்த இளவரசனை சங்கிலியால் கட்டி கொலைக்களத்திற்கு இழுத்து சென்றனர். அவர்மேல் குடத்து நீரை ஊற்றி காவியாடை, ஆணி செருப்பினை அணிவித்து ஆறு மாதங்கள் சிறைவைத்தனர். பின்பு கழுவேற்றி துடிக்க துடிக்க கொன்றனர். இளவரசர் இறந்த செய்திக்கேட்டு சின்னணைஞ்சியும் தற்கொலை செய்துகொண்டாள்.

கோயில்கள்[தொகு]

  • கிளங்காடு கோயில், தென்காசி வட்டம். தனிசந்நதி இவருக்கு உள்ளது.
  • நாலுமாவடி பாதக்கரை சுவாமிகள் கோயில், தூத்துக்குடி மாவட்டம்[2]
  • தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயில், தூத்துக்குடி மாவட்டம்[3]
  • பொதுவாக சுடலைமாடன் கோயில்களில் இவர் நிலைகொண்டிருப்பதாக நம்பிக்கை.

ஆதாரங்கள்[தொகு]

  1. சிறப்பான வாழ்வளிப்பார் சிவனிணைந்த பெருமாள் | Perumal special valvalippar civaninainta- Dinakaran[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "பாவங்கள் போக்கும் பாதக்கரையான் சாமி - Sami will go sins patakkaraiyan- Dinakaran". Archived from the original on 2022-03-15. பார்க்கப்பட்ட நாள் 2016-07-27.
  3. "செழுமையான வாழ்வளிக்கும் செம்மண்! - Rich in life-giving soil!- Dinakaran". Archived from the original on 2022-03-15. பார்க்கப்பட்ட நாள் 2016-07-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவனிணைந்த_பெருமாள்&oldid=3728329" இலிருந்து மீள்விக்கப்பட்டது