சிவஞான மாபாடியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவஞான மாபாடியம், மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' சைவ சாத்திர நூல்களில் ஒன்றாகும். இந்நூலுக்கு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சார்ந்த சிவஞான முனிவர் 'சிவஞான மாபாடியம்' என்ற பேருரையை எழுதினார். பண்டித நடையில் அமைந்த பேருரையை அனைவருக்கும் புரியும் விதமாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.சு.மணி விளக்கியுள்ளார். இயன்ற இடங்களில் உரை சந்தி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.கடுமையான இலக்கணப் பகுதிகள் மென்மையாக விளக்கப்பட்டுள்ளன. சிவஞான முனிவர் பயன்படுத்திய வட சொற்களுக்கு ஏற்ற இடங்களில் தமிழ்ச் சொற்களும் தரப்பட்டுள்ளன.

நூலாசிரியர்[தொகு]

பாளையங்கோட்டை சிதம்பர சுப்பிரமணி என்பாரே சி.சு.மணி ஆவார். குமர குருபரர் மரபில் தோன்றியவர். சைவ சாத்திரங்கள் முழுமைக்கும் உரை எழுதியுள்ளார். சிறந்த சித்தாந்தப் பேச்சாளர். சைவத்திருமடங்களுக்கும் சைவப் பெருமன்றங்களுக்கும் சென்று சொற்பொழிவுகள் ஆற்றியவர்

மேற்கோள்[தொகு]

சிவஞான மாபாடியம் - விளக்கம், சி.சு. மணி பதிப்பகம், பாளையங்கோட்டை - 627 002 இரண்டாம் பதிப்பு : திசம்பர் 2001

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவஞான_மாபாடியம்&oldid=3523979" இருந்து மீள்விக்கப்பட்டது