உள்ளடக்கத்துக்குச் செல்

சில்லா-நாசினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூஃபி மெளலவியின் சில்லா-நாசினி

சில்லா-நாசினி (ஆங்கிலம்: Chilla-nashini, பாரசீக மொழி: چله نشینی‎) என்பது தன்னை அறிவதற்கான மதம் சார்ந்த ஒரு சுய பரிசோதனை ஆகும். இது இந்திய மரபிலும் பாரசீக மரபிலும் கடைபிடிக்கப்படுகிறது. தியானத்தின் மூலம் மனதை ஒரு நிலைப்படுத்தி, நாற்பது நாட்கள் உணவு உட்கொள்ளாமல் அமைதியாக இருப்பதாகும். "சில்லா" எனும் வார்த்தை பாரசீக மொழியைச் சார்ந்தது, இதற்கு நாற்பது என்று பொருள். "நாசினி" என்பது இதை மேற்கொள்ளும் நபரைக் குறிப்பதாகும். இதைக் கைக்கொள்பவர்கள் முழுமையாக இதை முடிக்காவிட்டால் அவர்களுக்கு மரணமோ மனநிலைப் பிறழ்வோ ஏற்படும் என்பது (மூட)நம்பிக்கையாகும்.[1] இதனால் அடையும் இறுதி நிலையானது இதைக் கைள்கொள்பவரைப் பொருத்தும் கைக்கொள்ளும் முறையையும் பொருத்தது.

வேதாந்தங்களிலும் சூஃபி மரபிலும்

[தொகு]

"சில்லா-நாசினி" மிகக் கடுமையான வழியாகும். இதை மேற்கொள்பவர்கள் தனது கையால் தரையில் ஓரு வட்டம் வரைந்து அதனுள் நாற்பது நாட்கள் உணவு அருந்தாமலும் உறக்கமின்றியும் இருக்க வேண்டும். எந்தச் சூழலிலும் வட்டத்தைவிட்டு வெளியேறக்கூடாது. இது சூஃபி மரபிலும் வேதாந்த மரபிலும் கூறப்பட்டுள்ளது.[2]

இசையின் மூலம்

[தொகு]

"சில்லா-நாசினி" இசை கலைஞர்களாலும் பயிற்சி செய்யப்படுகிறது. மூடிய அறைக்குள் நாற்பது நாட்கள் தனது இசைக்கருவியை மீட்டியபடி அமர்ந்திருப்பர். இந்த நாற்பது நாட்களும் வெளியுலகுக்கு தொடர்பின்றி, மிகக் குறைந்த அளவு உணவை மட்டுமே அருந்துவர். இந்நாட்களில் தூங்கிவிழாமல் இருப்பதற்காக தனது முடியை சுவருடன் அல்லது கூரையுடன் கட்டி வைத்திருப்பர். இப்பயிற்சி மிக உயர்ந்த திறனுடைய இசைக் கலைஞர்களால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. எல்லோராலும் இதைச் செய்வது இயலாது. சாதாரணப் பயிற்சியின் மூலமும் "சில்லா-நாசினி"யை மேற்கொள்ள முடியாது. இப்பயிற்சி அனைத்து இசைக் கலைஞர்களாலும் ஒரே மாதிரி செய்யப்படுவது இல்லை.

வரலாற்றில்

[தொகு]

பதினான்காம் நூற்றாண்டின் சுயவரலாற்று நூற்களில் "சில்லா-நாசினி"யை மேற்கொண்டவர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன[3][4][5].

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சில்லா-நாசினி&oldid=1781911" இலிருந்து மீள்விக்கப்பட்டது