உள்ளடக்கத்துக்குச் செல்

சிலா மேத்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Shila Mehta
சிலா மேத்தா
பிறப்புகொல்கத்தா, இந்தியா
பணிநடனக் கலைஞர், நடனப் பயிற்சியாளர், ஆசிரியர், இசையமைப்பாளர்
வலைத்தளம்
www.shilamehtakathak.in

சிலா மேத்தா (Shila Mehta) ஒரு இந்திய பாரம்பரிய நடன கலைஞரும், நடன இயக்குனரும், நடன ஆசிரியரும் மற்றும் இசையமைப்பாளரும் ஆவார்.[1] தனது துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள கலைஞர் ஆவார். இவரது பின்னணி வட இந்திய வடிவமான கதக்கில் உறுதியாக வேரூன்றியுள்ளது. இது இந்தியா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட சுற்றுப்பயணங்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களிடம் எடுத்துச் சென்றுள்ளது.[2] மேத்தா இந்தியாவின் மும்பையிலுள்ள "நூபுர் ஜங்கர் நிகழ்த்து கலைகள் ஆராய்ச்சி மையம்" என்ற நடன நிறுவனத்தின் நிறுவனராவார். இது இப்போது உள்ளூர் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கான கலாச்சார மையமாக மாறியுள்ளது. இந்த நிறுவனம் புதுடில்லி, இந்தியாவின் கலாச்சார உறவுகள் அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகச் சிறிய வயதிலேயே, கலை மற்றும் கலாச்சாரத் துறையில் தனது சிறப்பம்சத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக குசராத்தி சமுதாயத்தில், ஆற்றல் அலைகளை கொண்டு வரும் அற்புதமான நிகழ்ச்சிகள் மற்றும் நடனங்கள் ஆகியவற்றை நிகழ்த்தினார்.[3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பயிற்சி

[தொகு]

சிலா கொல்கத்தாவில் சனவரி 1 அன்று பிறந்தார். அங்கிருந்து கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றார். மகாராட்டிரா காவி குல்குரு காளிதாஸ் சமசுகிருத பல்கலைக்கழகத்தில் நுண்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் அலகாபாத்தில் உள்ள பிரயாக் சங்க சமிதியிடமிருந்து "நிருத்ய பிரவீன்" என்ற பட்டத்தை பெற்றுள்ளார். சமகால நடனம், நடன சிகிச்சை மற்றும் தளம் சார்ந்த நடனம் ஆகியவற்றை ஆராய்வது உட்பட கனடாவின் டொராண்டோவின் யார்க் பல்கலைக்கழகம் வழியாக விரிவான தொழில் வளர்ச்சியையும் இவர் மேற்கொண்டார். மேத்தா தனது ஐந்து வயதில் நிருத்யாச்சார்யா பிரகலாத் தாசின் கீழ் நடனப் பயிற்சியைத் தொடங்கினார். பதினாறு வயதிலிருந்தே, பண்டிட் சித்ரேஷ் தாஸ், பண்டிட் விஜய் சங்கர் மற்றும் பண்டிட் பிர்ஜு மகாராஜ் குமுதினி லக்கியா போன்ற பிற முக்கிய நிபுணர்களுடன் பயிற்சிக்கு கணிசமான நேரத்தை செலவிட்டார்.[4] தாலியோகி பண்டிட் சுரேஷ் தல்வால்கரின் கீழ் இவரது லே மற்றும் டால் பயிற்சி இருந்தது. தற்போது இவர் முனைவர் கனக் ரிலுடன் அபிநய அழகியல் பற்றிய புரிதலில் பணியாற்றி வருகிறார்.[3]

நிகழ்ச்சிகள்

[தொகு]

சிலா இந்தியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காஉள்ளிட்ட நாடுகளில் பல மதிப்புமிக்க திருவிழாக்கள் மற்றும் அரங்குகளில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இவரது தனித்துவமான பாணியை அங்கீகரிக்கும் பல விருதுகளை இவரது படைப்புகள் பெற்றுள்ளன. சைதன்ய யோகா மற்றும் சரணி கதக் மற்றும் பிரபலமான நாட்டுப்புற நடனங்களின் அடிப்படையிலான நடன அமைப்புகள் போன்றவற்றில் பங்களிப்புக்காகவும் இவர் நன்கு அறியப்படுகிறார்.

நூபுர் ஜங்கர் நிகழ்த்து கலைகள் ஆராய்ச்சி மையம்

[தொகு]

1983 முதல் இந்தியாவின் கொல்கத்தாவில் வேர்களைக் கொண்ட "நுபுர் ஜங்கர் நிகழ்த்து கலைகள் ஆராய்ச்சி மையம்", இப்போது மும்பை அறக்கட்டளை சட்டம், 1950 இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளையாக உள்ளது. இது 30 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்தர நடனக் கல்வியை வழங்கி வருகிறது. இந்திய கலாச்சார உறவுகளுக்கான அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட இந்த நிறுவனம், கதக்கின் பாரம்பரிய கலை வடிவத்தை உள்ளூர் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு கற்றுத்தருகிறது.

குறிப்புகள்

[தொகு]
  1. "Shila Mehta Kathak". Kathak Dancer Shila Mehta. Archived from the original on 26 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Vereecken, Eva (2010-12-13). "Belgium discovers Kathak with Shila Mehta". www.narthaki.com. Nathaki. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014.
  3. 3.0 3.1 [1][தொடர்பிழந்த இணைப்பு]
  4. RAJAN, ANJANA (2013-07-11). "The Hindu". www.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 18 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிலா_மேத்தா&oldid=3929934" இலிருந்து மீள்விக்கப்பட்டது