சிறு மலர் கல்லூரி, குருவாயூர்

ஆள்கூறுகள்: 10°36′20″N 76°02′05″E / 10.605546°N 76.0347968°E / 10.605546; 76.0347968
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறு மலர் கல்லூரியின் நுழைவு வாயில்
சிறு மலர் கல்லூரி, குருவாயூர்
வகைசிறுபான்மையினரின் அரசு உதவி பெறும் மகளிர் கல்லூரி
உருவாக்கம்1955; 69 ஆண்டுகளுக்கு முன்னர் (1955)
சார்புகோழிக்கோடு பல்கலைக்கழகம்
தரநிர்ணயம்தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
முதல்வர்அருட்திரு. முனைவர் எம்.ஏ.வல்சா
பணிப்பாளர்அருட்திரு.லிட்டில் மேரி
அமைவிடம்
புதன்பள்ளி அஞ்சல்
, , ,
680103

10°36′20″N 76°02′05″E / 10.605546°N 76.0347968°E / 10.605546; 76.0347968
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்கல்லூரி இணையதளம்
சிறு மலர் கல்லூரி, குருவாயூர் is located in கேரளம்
சிறு மலர் கல்லூரி, குருவாயூர்
Location in கேரளம்
சிறு மலர் கல்லூரி, குருவாயூர் is located in இந்தியா
சிறு மலர் கல்லூரி, குருவாயூர்
சிறு மலர் கல்லூரி, குருவாயூர் (இந்தியா)

சிறு மலர் கல்லூரி, குருவாயூர் என்பது இந்தியாவின் குருவாயூரில் உள்ள ஒரு பெண்கள் கத்தோலிக்க கல்லூரியாகும். [1] கோழிக்கோடு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள[2] இக்கல்லூரியின் நிர்வாகம் பிரான்சிஸ்கன் திருச்சபையின் திருச்சூர் அசிசி மாகாணத்தின் கீழ் நடைபெறுகிறது.

2017 ஆம் ஆண்டில், தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (NIRF) தரவரிசையில் இக்கல்லூரி இந்தியாவில் 49 வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.[3]

வரலாறு[தொகு]

1955 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல்[4] இக்கல்லூரி இயங்கிவருகிறது.திருச்சூர் ரோமன் கத்தோலிக்க பேராயரின் மத அதிகாரத்தின் கீழ் உள்ள பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையால் நிறுவப்பட்ட[5] இந்த கல்லூரி முதன்முதலில் சென்னைப் பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டிருந்தது. பின்னர் 1957 ஆம் ஆண்டில் கேரளப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது,

1968 ஆம் ஆண்டில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் இணைக்கப்பட்ட இந்தக் கல்லூரி 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இரண்டாம் நிலைக் கல்லூரியாகச் செயல்படத் தொடங்கியது. கணிதத்தில் இளங்கலை அறிவியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் ஆகியவற்றை அதன் கல்விப்பிரிவுகளில் சேர்த்த பிறகு, இக்கல்லூரி முதல் தர கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.


தற்போது இக்கல்லூரி மலப்புரம், பாலகாடு மற்றும் திருச்சூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள கல்வி நிருவனங்களில் முதன்மை கல்வி மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதோடு, சுமார் 2000 மாணவர்கள் கொண்ட கல்லூரியாக, 2 தொழிற்கல்வி படிப்புகள் மற்றும் 9 முதுகலை திட்டங்கள் மற்றும் ஒரு சமூக கல்லூரி உட்பட 17 இளங்கலைப் பாடங்களை பயிற்றுவிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. . 17 June 2007. 
  2. "Little Flower College". University of Calicut.
  3. "MHRD, National Institute Ranking Framework (NIRF)". www.nirfindia.org. பார்க்கப்பட்ட நாள் 2021-04-08.
  4. {{cite web}}: Empty citation (help)
  5. "Little Flower College Guruvayoor".