சிறு தேவதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ängsälvor (Swedish "Meadow Elves") by Nils Blommér (1850)

சிறு தேவதை (Elf) அல்லது எல்ஃப் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படக் கூடிய இவை, ஜெர்மன் புராணக் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் சித்தரிக்கப்படும் மனித உருவில் உள்ள, மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி கொண்டவையாகும். மத்தியகால ஜெர்மானிய இலக்கியங்களில் இவை மிகுந்த அழகுள்ளவையாகவும், மனித சக்திக்கு அப்பாற்பட்டதாகவும், மனிதர்களுக்கு உதவி செய்வதாக அல்லது அவர்களின் செயலைத் தடை செய்வதாகச் சித்தரிக்கப் பட்டுள்ளன.[1]

சிறு தேவதை அல்லது எல்ஃப் எஎன்னும் வார்த்தை ஜெர்மன் மொழி இலக்கியங்கள் அனைத்திலும் முழுவதும் 'வெள்ளையாக இருக்கும்' என்ற அர்த்தம் கொள்ளும் வகையில் காணப்படுகிறது. பழைய காலங்களில் இருக்கும் சிறு தேவதை அல்லது எல்ஃப் எனும் கருத்து கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட பழைய மற்றும் மத்திய ஆங்கிலம், மத்திய ஜெர்மனி மற்றும் பழைய வடக்கு ஜெர்மனி மொழி உரைகள் முழுவதிலும் காணலாம். இந்த உரைகள் இந்த தேவதைகளை பலவிதங்களின் ஜெர்மன் புராணக் கதைகளின் கடவுள்கள், சுகவீனங்கள், மாய வித்தைகள், அழகு மற்றும் மயக்கும் தன்மையோடு தொடர்பு படுத்தி கூறுகிறது.

மத்திய காலத்திற்கு பிறகு ஜெர்மனியில் இந்த சிறு தேவதை அல்லது எல்ஃப் எனும் வார்த்தை உபயோகம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய ஆரம்பித்து இறுதியில் ஜெர்மன் மொழியின் ஸ்வெர்க் ("dwarf"/ குள்ளமான), ஸ்கன்டிநேவியன் மொழியில் உள்ள 'ஹல்ட்ரா' ('hidden' / மறைக்கப் பட்ட) இறுதியாக பிரெஞ்சு மொழியில் இருந்து வனதேவதை என அர்த்தம் கொள்ளூம் 'fairy' போன்ற வார்த்தைகள் எடுத்தாளப் பட்டது. வனதேவதை என்கிற வார்த்தை ஜெர்மானிய மொழிகள் அனைத்திலும் கையாளப் பட்டது. இருந்தாலும் நவீன் கால ஆரம்பத்தில் இச் சிறு தேவதைகள் உபயோகப் படுத்தப் பட்டே வந்தது. முக்கியமாக ஸ்காட்லாந்து மற்றும் ஸ்கான்டி நேவிய பகுதிகளில் இவை உபயோகப் படுத்தப் பட்டன. இங்கு இவைகள் அனுதின மனித வாழ்வில் மனிதர்களோடு மறைந்து வாழும் மாயமந்திரங்களினால் வலிமையுள்ளவர்களாக கருதப் பட்டனர். இவைகள் தொடர்ந்து சுகவீனத்தை உருவாக்குகிறதாகவும் பாலியல் அச்சுறுத்தும் ஒன்றாகவும் தொடர்பு படுத்தப் பட்டு பார்க்கப் பட்டது. எடுத்துக் காட்டாக மத்திய காலத்தில் உருவாக்கப் பட்ட நாட்டுப் புற பாடல்களும் கதைப் பாடல்களும் இந்த சிறு தேவதை அல்லது எல்ஃப்கள் மக்களை மயக்குகிறவர்களாகவும் மனிதர்களை கடத்துபவர்களாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளது. இவைகள் பிரித்தானிய தீவுகளிலும் ஸ்கண்டிநேவியா பகுதிகளிலும் பிரபலம். நகரமயமாதல் மற்றும் தொழிற் புரட்சி காரணமாக இந்தக் கருத்து மக்கள் மனதில் இருந்து மறைய ஆரம்பித்தது. (ஆனால் ஐஸ்லாந்தில் இந்த கருத்து இன்றும் பிரபலமே). எப்படி ஆனாலும் நவீன காலத்தின் ஆரம்பத்தில் இருந்தே இந்த சிறு தேவதை அல்லது எல்ஃப் கருத்து இலக்கியங்கள் மற்றும் கலைக் கல்வியில் உயர் அடுக்கில் இடம் பெற ஆரம்பித்தது. இவைகள் இந்த இலக்கியங்களில் சிறிய குறும்புக்கார உயிரிகளாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது. ஷேக்ஸ்பியரின் 'ஒரு மத்திய கோடை கால இரவின் கனவு' என்ற இலக்கத்தியமே இதன் மறு பிறப்பு அல்லது வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஆகும். பதினெட்டாம் நூற்றாண்டில் காதல் கதைகள் எழுதும் ஜெர்மானிய நாவலாசிரியர்கள் இந்த கருத்தை அதிகம் வலியுறுத்தி கதைகள் எழுத ஆரம்பித்தனர். இவர்களே மறுபடியும் அந்த எல்ஃப் எனும் ஆங்கில வார்த்தையை இலக்கியங்களில் புகுத்த ஆரம்பித்தனர். இந்த உயர்நிலை காதல் இலக்கியத்திலிருந்து பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் வந்த பொதுவான அனைவருக்கும் தெரிந்த இலக்கியத்திற்கு இந்த தேவதைகள் எனும் கருத்து வந்தது. 'கிறிஸ்மஸ் தேவதைகள்' எனும் எனும் தற்கால பொது இலக்கியத்தில் ஒரு புது வரவாகக் கருதப் பட்டது, இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்ற கருத்தாக மாறியது. இவைகள் இருபதாம் நூற்றாண்டில் அதி கற்பனை வளம் மிக்க இலக்கியங்களில் இவை மறுபடியும் புகழ் பெற ஆரம்பித்தன. இவைகள் மனித உருவத்தில் மனிதனைப் போலவே சித்தரிக்கப் படுகின்றன. ந்வீன கதைகளிலும் விளையாட்டுகளிலும் இவை முக்கிய இடம் வகிக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. For discussion of a previous formulation of this sentence, see Ármann Jakobsson 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறு_தேவதை&oldid=3924987" இலிருந்து மீள்விக்கப்பட்டது