சிறுகிளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருளில் பனியுடன் கூடிய ஆப்பிள் மரக் கிளைகள்

சிறுகிளை என்பது ஒரு மரத்தின், அல்லது புதரின் மெல்லிய, பெரும்பாலும் குறுகிய கிளை ஆகும்[1]. சிறுகிளைகளில் காணப்படும் மொட்டுகள் மற்றும் இலைகள் உதிர்ந்த வடுக்கள் இவற்றின் முக்கியமானதொரு தனி பண்பாகும். சிறுகிளையின் தடிமன், அதில் இருக்கக்கூடிய சிறுகுழிகளின் தன்மை, பட்டையின் நிறம், நயம், மற்றும் மரப்பட்டையின் வடிவமைப்பு ஆகியவையும் முக்கியத்துவம் வாய்ந்தவை[2].

இரண்டு வகையான சிறுகிளைகள் உள்ளன: தாவர சிறுகிளைகள் மற்றும் கனியுறும் தண்டுகள். கனியுறும் தண்டுகள் சிறப்புக் கிளைகளாகும், அவை பொதுவாக பக்கக் கிளைகளிலிருந்து கிளைத்து, தட்டையாக மற்றும் மெதுவாக வளரும், கடந்த கால பருவங்களின் ஆண்டு வளைய அடையாளங்களுடன் இருப்பவை. ஒரு கிளையின் வயது மற்றும் வளர்ச்சி விகிதத்தை, குளிர்கால நுனி மொட்டுகள், செதில் இலைகளின் வடுக்கள் அல்லது கிளைவட்டம் முழுதுமுள்ள ஆண்டு வளையங்களை கணக்கிடுவதன் மூலம் கணக்கிடலாம்.

சிறுகிளைகளின் பயன்கள்[தொகு]

  • நெருப்பு மூட்ட சிறுகிளைகள் பயனுள்ளதாக இருக்கும். அவை எளிதில் தீப்பற்றிக் கொள்ளக்கூடிய தீப்பற்றுக்கட்டை (உலர்ந்த புல் மற்றும் இலைகள்) மற்றும் விறகுகளுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் நெருப்பைத் தூண்டும் மரமாகப் பயன்படுத்தப்படலாம். ஒளிச்சேர்க்கையில் பயன்படுத்தப்படும் அதிக அளவு சேமிக்கப்பட்ட கார்பனீராக்சைடே இதற்குக் காரணம்.
  • வேடிக்கையாக இருப்பினும், சிறுகிளைகளுக்கு மற்றொரு பயன் இருப்பதை விலங்குகளிடமிருந்து அறிகிறோம். ஒரு சிறுகிளை நமக்கு முக்கியமில்லாமல் இருக்கலாம், ஆனால் யானைக்கு அது முக்கியம் என தெரிகிறது[3].
  • சிறுகிளைகள் உள்ளிட்ட பசுமைக் குப்பைகளை குப்பைக் கிடங்குகளில் கொட்டுவதை விட, அவற்றைச் சிறப்பாகக் கையாள்வதன் மூலம் மரக் குப்பை கொட்டும் இடங்களில் திடீரென தீப்பிடிப்பதைத் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "சிறுகிளை". dictionary.com. ஓக்லாண்ட்: Dictionary.com, LLC. 
  2. ஆலன் கிரிவெல்லாரோ மற்றும் ஃபிரிட்ஸ் ஹான்ஸ் ஸ்வீங்ரூபர் கிழக்கு மத்தியதரைக் கடல் மரங்கள் மற்றும் புதர்களின் அட்லஸ் ஆஃப் வூட், பட்டை மற்றும் பித் உடற்கூறியல்: சைப்ரஸில் சிறப்பு கவனம் செலுத்துதல் (2013), p. 2, கூகுள் புத்தகங்களில்
  3. பி கே, லட்சுமிகாந்தா (24 சூலை 2020). "பெங்களூரு பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் உள்ள யானைகள் தங்கள் உடலை கீறுவதற்கு சிறுகிளைகளைப் பயன்படுத்துகின்றன" (in en). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (பெங்களூரு). https://timesofindia.indiatimes.com/city/bengaluru/elephants-at-bengalurus-bbp-use-twigs-to-scratch-their-bodies/articleshow/77144447.cms. 
  4. சந்திரபாபு, திவ்யா (6 சனவரி 2017). "இலைகள் மற்றும் சிறுகிளைகளை உரமாக்குவதன் மூலம் தீப்பிழம்புகளைத் தடுக்கலாம்" (in en). டைம்ஸ் ஆஃப் இந்தியா (சென்னை). https://timesofindia.indiatimes.com/city/chennai/composting-leaves-twigs-can-prevent-blazes/articleshow/56363824.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுகிளை&oldid=3913864" இலிருந்து மீள்விக்கப்பட்டது