சிறீ விநாயகா பல்தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீ விநாயகா பல்தொழில்நுட்பக் கல்லூரி
அமைவிடம்
போச்சம்பள்ளி
, ,

சிறீ விநாயகா பல்தொழில்நுட்பக் கல்லூரி (Sri Vinayaka Polytechnic College) என்பது தமிழ்நாட்டில் கிருட்டிணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், புதுமோட்டூரில், தரும்புரி சாலையில் உள்ள ஒரு பல்தொழில்நுட்பக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, சென்னையிலுள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் இணைக்கப் பெற்றுள்ளது.

பட்டய பாடப்பிரிவுகள்[தொகு]

இங்கு மூன்று ஆண்டு கால அளவிலான கீழ்க்காணும் பட்டயப்படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன.

  1. இயந்திரப் பொறியியல்
  2. குடிசார் பொறியியல்
  3. தானுந்து பொறியியல்
  4. மின் மற்றும் மின்னணு பொறியியல்
  5. மின்னணு மற்றும் தொடர்புப் பொறியியல்
  6. இயந்திரப் (கருவி மற்றும் வாரப்பு) பொறியியல்


மேற்கோள்கள்[தொகு]

  1. ஸ்ரீ விநாயகா பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம், தினமணி, 2018 சனவரி 12