பொதியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19: வரிசை 19:
:பொதியமலையில் அன்னப்பறவைகள் விளையாடும். அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும் கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் - புறநானூறு 128
:பொதியமலையில் அன்னப்பறவைகள் விளையாடும். அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும் கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் - புறநானூறு 128
==பொதுவான ஊர்ச்சாவடி==
==பொதுவான ஊர்ச்சாவடி==
பொதியில் என்பது ஊர்மக்களின் பொதுவான இல்லமாகிய ஊர்ச்சாவடியைக் குறிக்கும். இங்கு நடப்பட்டிருந்த கந்தம் என்னும் தூணில் கடவுள் குடிகொண்டிருந்ததாக மக்கள் நம்பினர். இயங்குநர் செகுக்கும் எய்படு நனந்தலை, பெருங்கை எண்கு இனம் குரும்பி தேரும், புற்றுடைக் கவர புதல் இவர் பொதியில் கடவுள் போகிய கருந்தாள் கந்தத்து, புறா இருந்து பயிரும் - அகநானூறு 307
:பொதியில் என்பது ஊர்மக்களின் பொதுவான இல்லமாகிய ஊர்ச்சாவடியைக் குறிக்கும். இங்கு நடப்பட்டிருந்த கந்தம் என்னும் தூணில் கடவுள் குடிகொண்டிருந்ததாக மக்கள் நம்பினர். <ref>இயங்குநர் செகுக்கும் எய்படு நனந்தலை, பெருங்கை எண்கு இனம் குரும்பி தேரும், புற்றுடைக் கவர புதல் இவர் பொதியில் கடவுள் போகிய கருந்தாள் கந்தத்து, புறா இருந்து பயிரும் - அகநானூறு 307</ref>
வயது முதிர்ந்தவர்கள் இங்கு அமர்ந்துகொண்டு வல் என்னும் சூது விளையாடுவர். இந்த விளையாட்டுக்கு நாய் என்னும் கல்லுக்காய் பயன்படுத்தப்படும். கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப் பலிகண் மாறிய பாழ்படு பொதியில் நரைமூதாளர் நாய் இடம் குழித்த வல் விளையாட்டு - புறநானூறு 52 பொதியிலில் இருந்துகொண்டு நரைமூதாளர் வல் என்னும் சூதாட்டம் ஆடுவர் - அகநானூறு 377 இதனை வல்லநாய் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. ஊர்மக்கள் குடிபெயர்ந்துவிட்டால் இந்தப் பொதியில் கறையான் அரித்துப் பாழ்பட்டுக் கிடக்கும். சிதலை வேய்ந்த போர்மடி நல்லில் பொதியில் \ அகநானூறு 167
:வயது முதிர்ந்தவர்கள் இங்கு அமர்ந்துகொண்டு வல் என்னும் சூது விளையாடுவர். இந்த விளையாட்டுக்கு நாய் என்னும் கல்லுக்காய் பயன்படுத்தப்படும். <ref>கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப் பலிகண் மாறிய பாழ்படு பொதியில் நரைமூதாளர் நாய் இடம் குழித்த வல் விளையாட்டு - புறநானூறு 52</ref> <ref>பொதியிலில் இருந்துகொண்டு நரைமூதாளர் வல் என்னும் சூதாட்டம் ஆடுவர் - அகநானூறு 377</ref> இதனை வல்லநாய் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
:ஊர்மக்கள் குடிபெயர்ந்துவிட்டால் இந்தப் பொதியில் கறையான் அரித்துப் பாழ்பட்டுக் கிடக்கும். <ref>சிதலை வேய்ந்த போர்மடி நல்லில் பொதியில் - அகநானூறு 167</ref>

புறநானூறு 390
==கடவுள் பொதியில்==
==கடவுள் பொதியில்==
;பொதினியில்
;பொதினியில்

07:07, 24 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

சங்ககாலத்தில் பொதியம் என்றும், பொதியில் என்றும் வழங்கப்பட்ட மலையை இக்காலத்தில் பொதிகைமலை என்றும் கூறுவர்.
சங்ககாலத்தில் வையை என வழங்கப்பட்ட ஆற்றை இக்காலத்தில் வைகை எனவும் வழங்குவது போன்றது இது.
வடக்கில் இமயமலையும், தெற்கில் பொதியமலையும் தமிழர் சென்றுவந்து கண்ட ஓங்கி உயர்ந்த மலைகள். பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று நிலீஇயர் - புறநானூறு 2

ஆண்ட அரசர்கள்

ஆய், திதியன்

சங்க காலத்தில் பொதியமலை நாட்டை ஆய் கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் - குறுந்தொகை 84, திதியன் ஆகிய குறுநில மன்னர்கள் ஆண்டுவந்தனர். பொதியிற்செல்வன் பொலந்தேர்த் திதியன் - அகநானூறு 25
நெடுஞ்செழியன் வெற்றி
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இந்தப் பொதியமலை நாட்டை வென்று தனதாக்கிக்கொண்டான். அவை இருந்த பெரும்பொதியில் பேய்மகளிர் ஆடத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் வென்றான் - மதுரைக்காஞ்சி 161
தென்னவன்
தென்னவன் என்னும் பாண்டியன் இதனை ஆண்ட காலமும் உண்டு. இவனது பொதியில் நாட்டில் நீர் கொட்டிய அருவி குற்றாலம். திருந்திலை நெடுவேள் தென்னவன் பொதியில் அருஞ்சிமை இழிதரும் ஆர்த்துவரல் அருவியின் ததும்புசீர் இன்னியம் - அகநானூறு 138
கோசர்
கோசர் என்னும் குடிமக்கள் இங்கு வந்து பறையறைந்து அரசனுக்காக வரி தண்டினர். தொன்மூது ஆலத்துப் பொதியில் தோன்றிய நான்மொழிக் கோசர் வாய்மொழி போல அலர் பரவிற்று - குறுந்தொகை 15 புனைதேர்க் கோசர் தொன்மூதாலத்து அரும்பணைப் பொதியில் இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியாமையின், வம்ப மோரியர் வந்தனர் அகநானூறு 251

மலைவளம்

சந்தனம்
பொதியமலையில் சந்தன மரங்கள் அதிகம். அங்கு மக்கள் நடமாட்டம் இல்லை. மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியில் சந்தனம் போல் அவள் தண்ணியள் \-குறுந்தொகை 376
காந்தள்
காந்தள் மலர் மிகுதி. பொதியில் பூத்த காந்தள் போன்ற கை அவளுக்கு - நற்றிணை 379
அன்னம்
பொதியமலையில் அன்னப்பறவைகள் விளையாடும். அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும் கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் - புறநானூறு 128

பொதுவான ஊர்ச்சாவடி

பொதியில் என்பது ஊர்மக்களின் பொதுவான இல்லமாகிய ஊர்ச்சாவடியைக் குறிக்கும். இங்கு நடப்பட்டிருந்த கந்தம் என்னும் தூணில் கடவுள் குடிகொண்டிருந்ததாக மக்கள் நம்பினர். [1]
வயது முதிர்ந்தவர்கள் இங்கு அமர்ந்துகொண்டு வல் என்னும் சூது விளையாடுவர். இந்த விளையாட்டுக்கு நாய் என்னும் கல்லுக்காய் பயன்படுத்தப்படும். [2] [3] இதனை வல்லநாய் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
ஊர்மக்கள் குடிபெயர்ந்துவிட்டால் இந்தப் பொதியில் கறையான் அரித்துப் பாழ்பட்டுக் கிடக்கும். [4]

கடவுள் பொதியில்

பொதினியில்
பொதினி எனப்பட்ட பழனியில் இருந்த பொதியிலில் முருகு தெய்வம் குடிகொள்ளும். [5]
புகார் நகரில் பொதியில்
காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த பொதியில் தூணில் பெண்யானைகளைக் கட்டி ஆண்யானையை ஏறவிடுவர். [6]

அகத்தியர்

பொதியமலையில் இருந்துகொண்டு அகத்தியர் தமிழ் வளர்த்ததாகக் கதைகள் கூறுகின்றன.

அடிக்குறிப்பு

  1. இயங்குநர் செகுக்கும் எய்படு நனந்தலை, பெருங்கை எண்கு இனம் குரும்பி தேரும், புற்றுடைக் கவர புதல் இவர் பொதியில் கடவுள் போகிய கருந்தாள் கந்தத்து, புறா இருந்து பயிரும் - அகநானூறு 307
  2. கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப் பலிகண் மாறிய பாழ்படு பொதியில் நரைமூதாளர் நாய் இடம் குழித்த வல் விளையாட்டு - புறநானூறு 52
  3. பொதியிலில் இருந்துகொண்டு நரைமூதாளர் வல் என்னும் சூதாட்டம் ஆடுவர் - அகநானூறு 377
  4. சிதலை வேய்ந்த போர்மடி நல்லில் பொதியில் - அகநானூறு 167
  5. முருகன் குடிகொள்ளும் இடங்களில் ஒன்று பொதியில் - முருகு 226
  6. வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில் பெண்யானையைத் பெருந்தூணில் கட்டிவைத்து யானையைப் புணரவிடுவர் - பட்டினப்பாலை 249
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதியம்&oldid=935731" இலிருந்து மீள்விக்கப்பட்டது