திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''[[திருப்பரங்குன்றம்]] பரங்கிநாதர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் [[மதுரை மாவட்டம்| மதுரை மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. இத்தலத்தில் முருகன் தெய்வானையை மணம் புரிந்த தலம் என்பது தொன்நம்பிக்கை.
'''[[திருப்பரங்குன்றம்]] பரங்கிநாதர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் [[மதுரை மாவட்டம்| மதுரை மாவட்டத்தில்]] அமைந்துள்ளது.
== தல வரலாறு ==
கயிலாயத்தில் [[சிவபெருமான்]], பார்வதிதேவிக்கு ஒம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

இந்நிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவபெருமான் - பார்வதிதேவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமே திருப்பரங்குன்றம் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் என அழைக்கப்படும் பரங்கிநாதர் ஆலயமாகும். எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.

[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]

06:34, 24 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்

திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், சுந்தரர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தல வரலாறு

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிதேவிக்கு ஒம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.