பண்டு மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி தானியங்கிமாற்றல்: ru:Банту (языки) |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிமாற்றல்: uk:Банту (мови) |
||
வரிசை 65: | வரிசை 65: | ||
[[sw:Lugha za Kibantu]] |
[[sw:Lugha za Kibantu]] |
||
[[tr:Bantu dil ailesi]] |
[[tr:Bantu dil ailesi]] |
||
[[uk:Банту мови]] |
[[uk:Банту (мови)]] |
||
[[zh:班图语支]] |
[[zh:班图语支]] |
15:36, 15 மார்ச்சு 2010 இல் நிலவும் திருத்தம்
பண்டு மொழிகள் | |
---|---|
Default
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | bnt |
ISO 639-3 | – |
பான்டு மொழிகள் நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பல மொழிகளின் குழுமம் ஆகும். உண்மையில் பான்டு மொழிகள், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தின் துணைக் குழுவான பான்டோயிட் குழுமத்தின் ஒரு பகுதியாகும். பான்டு மொழிக் குழுவில் 513 மொழிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதே கணக்கீட்டின்படி, பான்டோயிட் குழுமத்தில் 681 மொழிகளும், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தில் 1514 மொழிகளும் உள்ளன[1].
பான்டு மொழிகள் தற்கால நைஜீரியாவுக்கு கிழக்கிலும் தெற்கிலும் உள்ள பகுதிகளில் பேசப்படுகின்றன. அதாவது, மத்திய ஆபிரிக்கா, கிழக்கு ஆபிரிக்கா மற்றும் தெற்கு ஆபிரிக்கப் பகுதிகள் இம் மொழிகள் பேசப்படும் பகுதிகளாகும். மேற்குறிப்பிட்ட பான்டு மொழிப் பகுதிகளில், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சாராத வேறு மொழிகளும் காணப்படுகின்றன.
பான்டு என்ற சொல்லை முதன் முதலில் இம் மொழிகள் தொடர்பில் பயன்படுத்தியவர், வில்ஹெல்ம் ஹென்றிக் இம்மானுவேல் பிளீக் (1827-1875) என்பவராவார். இது மக்கள் என்னும் பொருள் தருவது.