ராமராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ராமராஜன் திரைப்பட நடிகர்
(வேறுபாடு ஏதுமில்லை)

05:33, 22 சூன் 2009 இல் நிலவும் திருத்தம்

ராமராஜன் ஒரு தமிழ் சினிமா நடிகர். எண்பதுகளின் இறுதியில் உச்சத்தில் இருந்தவர். இவர் நடித்த படங்கள் தமிழகத்தில் நன்கு விற்பனை ஆகின. ரசித்து பார்க்கப்பட்டன. முதலில் உதவி இயக்குனராகவும் பிறகு இயக்குனராகவும் இருந்து பிறகு முழுநேர நடிகரானவர். இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் ஒரு திரையரங்கில் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது.

இவர் நடித்த புகழ்பெற்ற திரைப்படங்கள் - எங்க ஊரு பாட்டுக்காரன்,தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து, என் ராசாவின் மனசிலே, வில்லுபாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, ரயிலுக்கு நேரமாச்சு மற்றும் பல.

கங்கை அமரன், ரங்கராஜன் ஆகியோர் இவரது ஆஸ்தான இயக்குனர்களாக இருந்தனர். இவர் திரைப்பட நடிகை நளினியை திருமணம் செய்து கொண்டார். அருண், அருணா ஆகிய இரு வாரிசுகள் உள்ளன. சில வருட மண வாழ்க்கைக்கு பிறகு இப்போது விவாகரத்து பெற்று வாழ்ந்து வருகிறார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமராஜன்&oldid=394228" இலிருந்து மீள்விக்கப்பட்டது