பேண்தகு விவசாயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 4: வரிசை 4:


==வரலாறு==
==வரலாறு==

==வரையறை==


==மேலும் காண்க==
==மேலும் காண்க==

14:51, 28 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

பேண்தகு வேளாண்மை (Sustainable agriculture) என்பது உயிரினங்களுக்கும், சூழலுக்கும் இடையிலான தொடர்பை விளக்கும் சூழலியல் கொள்கைகளின் அடிப்படையில் வேளாண்மையை வடிவமைத்த வேளாண்மைமுறை ஆகும். இது ஒரு குறிப்பிட்ட இடத்தில், தாவர விளைச்சல், விலங்கு இனப்பெருக்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாகும் ஒரு திட்டமாக இருப்பதுடன், இந்தப் பேண்தகு வேளாண்மை , நீண்டகால நோக்கத்தில், இன்றைய தலைமுறை மக்களின் உணவு, உடைத் தேவையை நிறைவுசெய்யக் கூடியதாக இருத்தல் வேண்டும். வேளாண்மை தொழிற்பாடுகள் பொருளாதார முறையில் உணவு, உடைசார் வாழ்தகவுடன் அமைதலோடு தொடர்ந்துவரும் தலைமுறை மக்களுக்கும் அவற்றைப் பேணிப் பாதுகாப்பதாய் இருக்க வேண்டும். புதுப்பிக்கப்படாத வளங்களை (non-renewable resources) மிகுந்த வினைத்திறனுடம் கூடுதல் பயன்பாட்டுக்கு உட்படுத்த வல்லதாக இருக்க வேண்டும்.உழவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்தும் அதே வேளையில் ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும்.[1] பண்ணைச் சூழலில் இது ஈட்டம் (இலாபம்), சுற்றுச்சூழல் மேலாண்மை, நீதி அல்லது நன்னயம், நலவாழ்வு, வணிகம், குடும்பக் கூறுபாடுகள் ஆகியவற்ரை உள்ளடக்கும். வேளாண்மையின் பேண்தகவை உயர்த்தும் பலமுறைகள் உள்ளன. பேண்தகவு குறிப்பிட்ட வேளாண் விளைபொருளில் கவனம் செலுத்தாமல் பொதுவாகப் பண்ணையின் வணிகச் செயல்முறையிலும் நடைமுறையிலும் கவனத்தைக் குவிக்கிறது.[2]

வேளாண்மை பேரளவில் தன்பதிவைச் சுற்றுச்சூழலில் தடம்பதிக்கிறது;[3] வேளாண்மை சுற்றுச்சூழலை மாற்றி, அம்மாற்றங்கள் ஊடாக தானும் தாக்கமடைகிறது.[4] மக்கள்தொகை உயரும்போது உணவு விளைச்சலும் உயர்தல் வேண்டும். பேண்தகு வேளாண்மை மாற்றமுற்ற சுற்றுச்சூழல் நிலைமைகளில், மக்கள்தொகை உயர்வுக்கு ஏற்ப, உணவு விளைச்சலை மேம்படுத்தும் தகுந்த தீர்வைத் தருகிறது.[4] ஓரிடத்தில் இயற்கை வளங்கள் வரம்புடையன. எனவே திறம்பாடற்ற வேளாண்மை இந்த இயற்கை வளங்களை சிதைவுறச் செய்துவிடும் வாய்ப்புள்ளது. பிறகு அவற்றை மீட்பது அரிதாகிவிடும்.

வரலாறு

வரையறை

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Gold, M. (July 2009). What is Sustainable Agriculture?. United States Department of Agriculture, Alternative Farming Systems Information Center.
  2. "Introduction to Sustainable Agriculture". Ontario Ministry of Agriculture, Food and Rural Affairs. 2016. பார்க்கப்பட்ட நாள் 10 October 2019.
  3. Brown, L. R. (2012). World on the Edge. Earth Policy Institute. Norton. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-136-54075-2. [page needed]
  4. 4.0 4.1 Rockström, Johan; Williams, John; Daily, Gretchen; Noble, Andrew; Matthews, Nathanial; Gordon, Line; Wetterstrand, Hanna; DeClerck, Fabrice et al. (2016-05-13). "Sustainable intensification of agriculture for human prosperity and global sustainability". Ambio 46 (1): 4–17. doi:10.1007/s13280-016-0793-6. பப்மெட்:27405653. 

மேலும் படிக்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேண்தகு_விவசாயம்&oldid=2860289" இலிருந்து மீள்விக்கப்பட்டது