அற்புதத் திருவந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
4,199 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
அங்கையாற் காளாம் அது......................................11
 
 
 
 
அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும்
 
அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே
 
பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்
 
தனிக்கணங்கு வைத்தார் தகவு...................................12
 
 
தகவுடையார் தாமுளரேல் தாரகலம் சாரப்
 
புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர
 
ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்
 
சார்ந்திடுமே லேபாவம் தான்.....................................13
 
 
தானே தனிநெஞ்சம் தன்னை உயக்கொள்வான்
 
தானே பெருஞ்சேமம் செய்யுமால் - தானேயோர்
 
பூணாகத்தாற் பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும்
 
நீணாகத் தானை நினைந்து......................................14
 
 
நினைந்திருந்து வானவர்கள் நீள்மலரால் பாதம்
 
புனைந்தும் அடிபொருந்தமாட்டார் - நினைந்திருந்து
 
மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற்
 
கென்செய்வான் கொல்லோ இனி..................................15
 
 
இனியோம் நாம்உய்ந்தோம் இறைவன்தாள் சேர்ந்தோம்
 
இனியோர் இடரில்லோம் நெஞ்சே - இனியோர்
 
வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்
 
கனைக்கடலை நீந்தினோம் காண்................................16
 
 
காண்பார்க்கும் காணலாம் தன்மையனே கைதொழுது
 
காண்பார்க்கும் காணலாம் காதலால் - காண்பார்க்குச்
 
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்கு
 
ஆதியாய் நின்ற அரன்.........................................17
 
 
அரனென்கோ நான்முக னென்கோ அரிய
 
பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழியத்
 
தானவனைப் பாதத் தனிவிரலால் செற்றானை
 
யானவனை எம்மானை இன்று....................................18
 
 
இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்
 
அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றுமோர்
 
மூவா மதியானை மூவே ழுலகங்கள்
 
ஆவானைக் காணும் அறிவு.......................................19
 
 
அறிவானும் தானே அறிவிப்பான் தானே
 
அறிவா யறிகின்றான் தானே - அறிகின்ற
 
மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாசம்
 
அப்பொருளும் தானே அவன்......................................20
 
 
அவனே இருசுடர்தீ ஆகாச மாவான்
 
அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே
 
இயமான னாய்அட்ட மூர்த்தியுமாய் ஞான
 
மயனாகி நின்றானும் வந்து.......................................21
 
 
 
19

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/27960" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி