"யாக்கூப் ஆஃப்னர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
124 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
==இறுதிக் காலம்==
அம்சுட்டர்டாமில் குடும்பச் சூழல் சரியாக அமையாததாலும், பயணத்தில் அவருக்கு இருந்த விருப்பும் ஆஃப்னரை மீண்டும் கிழக்கு நோக்கிச் செல்லத் தூண்டியது. 1773ல் கோரமண்டல் கரையின் ஒல்லாந்தரின் தலைமையிடமான நாகபட்டினத்தில் ஒரு உதவிக் கணக்கராகச் சேர்ந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1779ல் செயலர்-கணக்கர் என்னும் பதவி உயர்வுடன் சத்ராசுப்பட்டினம் என்னும் இடத்துக்கு அனுப்பப்பட்டார். அப்போது ஏற்பட்ட நாலாம் ஆங்கில-ஒல்லாந்தப் போரில் போர்க் கைதியாக ஆங்கிலேயரிடம் பிடிபட்ட ஆஃப்னர் மதராசில் சிறை வைக்கப்பட்டார்.<ref>van der Velde,</ref> 1782ன் இறுதியில் விடுவிக்கப்பட்டர் ஆயினும், ஆங்கில ஆட்சியின் கீழ் மதராசில் இருப்பது பாதுகாப்பாக இருக்கவில்லை. அங்கிருந்து டென்மார்க்கின் ஆளுகைக்குள் இருந்த [[தரங்கம்பாடி]]க்குத் தப்பி வந்த அவர், அங்கும் நிலைமை நன்றாக இருக்காத காரணத்தால் அங்கிருந்து தோணியொன்றில் கடலைக் கடந்து அப்போது ஒல்லாந்தரின் ஆட்சியில் இருந்த யாழ்ப்பாணத்தை அடைந்தார். அவரைப் போலவே முன்னர் நாகபட்டினத்தில் இருந்து சிறைப்பட்டுப் பின்னர் தப்பிவந்த பலர் ஏற்கெனவே யாழ்ப்பாணத்தில் இருந்தனர். எனவே அவரது வாழ்க்கை அங்கே சில மாதங்கள் மகிழ்ச்சியாகக் கழிந்தது. பின்னர், பயணம் செய்யும் விருப்புக் காரணமாக சில மாதங்கள் இலங்கையில் காட்டுப் பகுதிகளூடாகக் கால்நடையாகப் பயணத்தில் ஈடுபட்டிருந்தார்.<ref>Haafner, J., Travels on Foot Through the Island of Ceylon (Translated from Dutch), Asian Educational Services, New Delhi, 1995.</ref> 1783ன் இறுதியில் அவர் கல்கத்தாவுக்குச் சென்றார்.<ref>van der Velde,</ref>
 
கல்கத்தாவில் இருந்த பிரித்தானிய ஆளுனரிடம் கணக்குப் பதிவாளராகப் பணியில் அமர்ந்தார். 1786ல் ஒரிசாவிலும், கோரமண்டல் கரையிலும் விரிவான பயணம் ஒன்றை மேற்கொண்டார். கடைசியாக இந்தியாவில் இருந்த ஆண்டுகளில் போதிய அளவு பணத்தையும் சேர்க்கக்கூடியதாக இருந்தது. 1787ல் அவர் மீண்டும் ஐரோப்பாவுக்குத் திரும்பினார். அங்கும் சில ஆண்டுகள் விரிவாகச் சுற்றுப்பயணம் செய்த ஆஃப்னர், 1790ல் அம்சுட்டர்டாமுக்கு வந்து அங்கே தங்கினார். அங்கிருந்த காலத்தில் தனது பயண அனுபவங்களை நூல்களாக எழுதினார். இவரது முதல் நூல் 1806ல் வெளியானது.<ref>van der Velde,</ref>
 
1809ம் ஆண்டு, இலங்கை பற்றிய தனது நூலை எழுதிக்கொண்டிருந்தபோது, 55 ஆவது வயதில் இதய நோய் காரணமாக ஆஃப்னர் காலமானார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2157471" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி