மம்மி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி "Momias_del_Llullaillaco_en_Salta_(Argentina).jpg" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளா...
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Momias de Llullaillaco en la Provincia de Salta (Argentina).jpg|thumb|250px|மம்மி.]]

'''மம்மி''' (Mummy) என்பது தற்செயலாகவோ, திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். இயற்கையாகவே சில வேதிப்பொருள்களாலும், கடும் குளிராலும் இறந்த உயிரினத்தின் சடலம் பாதுகாக்கப்படுவது உண்டு. இவ்வாறு காலத்தால் அழியாத மனித மம்மிகளையும், மற்ற விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராட்சியாளர்கள் கண்டுடெடுத்துள்ளனர்.
'''மம்மி''' (Mummy) என்பது தற்செயலாகவோ, திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். இயற்கையாகவே சில வேதிப்பொருள்களாலும், கடும் குளிராலும் இறந்த உயிரினத்தின் சடலம் பாதுகாக்கப்படுவது உண்டு. இவ்வாறு காலத்தால் அழியாத மனித மம்மிகளையும், மற்ற விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராட்சியாளர்கள் கண்டுடெடுத்துள்ளனர்.
== சொற்றோற்றம் ==
== சொற்றோற்றம் ==

18:10, 8 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

மம்மி.

மம்மி (Mummy) என்பது தற்செயலாகவோ, திட்டமிட்டோ காலத்தால் பாதுகாக்கப்பட்ட உயிரினத்தின் சடலத்தை குறிக்கும். இயற்கையாகவே சில வேதிப்பொருள்களாலும், கடும் குளிராலும் இறந்த உயிரினத்தின் சடலம் பாதுகாக்கப்படுவது உண்டு. இவ்வாறு காலத்தால் அழியாத மனித மம்மிகளையும், மற்ற விலங்குகளின் மம்மிகளையும் உலகமெங்கும் அகழ்வாராட்சியாளர்கள் கண்டுடெடுத்துள்ளனர்.

சொற்றோற்றம்

மம்மி என்ற சொல் ஆங்கிலத்தின் மம்மி என்ற சொல்லிருந்தும், அச்சொல் இலத்தீன் மொழியின் மம்மியா என்ற பதத்திலிருந்தும், இலத்தீன் மொழிச் சொல், பாரசீக மற்றும் அராபிய மொழிகளில் உள்ள மும்மியா (مومية) என்ற பதத்திலிருந்தும் தோன்றியதாக அறியப்படுகிறது. பாரசீக மொழியில் இப்பதம் நிலக்கீல் எனப் பொருள்படும். மம்மிகளின் நிறம் கருநிற நிலக்கீலின் நிறத்தை ஒத்திருப்பதாலும், எகிப்திய சடலப்பதனிடலில் இப்பொருள் உபபோகப்படுத்தப்பட்டதாக கூறப்படுவதாலும் இப்பெயர் சூட்டப்பட்டதாக அறிய முடிகிறது.

திட்டமிட்டு பாதுகாக்கப்பட்ட மம்மிகள்

பிரிதானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு மம்மி.

பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தமையால், அரசர்களின் சடலங்கள் பதனிடப் பட்டன. மனிதர்களின் சடலங்கள் மட்டுமல்லாது முதலை, பூனை ஆகியவற்றின் சடலங்களும் பதனிடலாக்கப் பட்டன. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர்களின் குறிப்பிலிருந்து பாரசீகத்தில் சில அரசர்களின் சடலங்களும் மெழுகை பயன்படுத்தி பதனிடலாக்கப் பட்டதாக அறிய முடிகிறது. எகிப்திய மம்மிகளே பொதுவாக அறியப்பட்டாலும், பதனிடலில் தொன்மையானவர்களாக கருதப்படுவோர், தென் அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் பெரு நாட்டில் வாழ்ந்த சின்சொரோ மக்களே. சின்சொரோ மம்மிகள், எகிப்திய மம்மிகளை விட பல ஆயிரம் ஆண்டு தொன்மையானவை.மற்றொரு பழமையான மம்மி நடு சகாராவில் உள்ள உன் முகுக்கியாக் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் மம்மியாகும். இம்மம்மியின் அகவை சுமார் 5500 வருடங்களாகும். வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=மம்மி&oldid=1615206" இலிருந்து மீள்விக்கப்பட்டது