உயிரணு வேற்றுமைப்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
13:35, 23 மே 2012 இல் நிலவும் திருத்தம்
உயிரணு வேற்றுமைப்பாடு அல்லது கல வேற்றுமைப்பாடு என்பது எளிய உயிரணுக்களில் இருந்து, தனித்துவமான உயிரணுக்கள் உருவாதல் ஆகும். பல்கல உயிரினங்களில், கருவணுவில் இருந்து உயிரணுப்பிரிவு மூலம் உருவாகும் பல கலங்களும் பின்னர் அவற்றின் அமைப்பு, தொழிலுக்கேற்ப பல தடவைகள் சிறப்பாக்கத்தின் மூலம் தனித்துவமான உயிரணுக்களை உருவாக்கிக் கொள்ளும். வேறுபட்ட இழையங்களில் காணப்படும் உயிரணுக்களுக்கிடையிலான அமைப்பு வேறுபாடும், அவற்றின் தொழில் வேறுபாடும் இத்தகைய உயிரணு வேற்றுமைப்பாட்டினாலேயே ஏற்படும்.