சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் - தகவல் தொழில்நுட்ப பூங்கா செங்கற்பட்டு மாவட்டத்தில், சென்னைப் புறநகர் பகுதியான சிறுசேரியில் அமைந்துள்ளது. இது 581.2 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

இடங்கள்[தொகு]

நிறுவனங்கள்[தொகு]

டி.சி.எஸ். நிறுவனம் 70 ஏக்கர் நிலத்தை 13 கோடி ரூபாய் மதிப்பில் இப்பூங்காவில் கையகப்படுத்தியுள்ளது. இருநூறு கோடி ரூபாய் செலவீட்டில் 30,000 பணியாளர்களுக்கான இருப்பிடம், உருகுவே நாட்டின் கட்டிட வடிவமைப்பாளர் கர்லொ ஒத் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. இஃது, அந்நாள் உருகுவே நாட்டின் துணைக் குடியரசு தலைவர் தானிலோ அஸ்டோரி அவர்கள் 23 பிப்ரவரி 2011 அன்று திறந்து வைத்தார்.[1] இதுவே ஆசியாவின் பெரிய த.தொ. அலுவலகமாகும்.[2]

சிறுசேரி த.தொ, பூங்காவில் உள்ள டி.சி.எஸ். வளாகம்

இதில் 2000 மகிழுந்துகளைக் கொள்ளுமளவு நிறுத்துமிடம் உள்ளது. தனிச்சிறப்பு கோபுரம் ஒன்று 132 மீட்டர் உயரமும் மற்றும் 28 தரைத்தளங்களும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. [ மேற்கோள் தேவை ]

  1. Siddiqui, Huma. "India, Uruguay to sign pact to avoid double taxation". The Indian Express. http://archive.indianexpress.com/news/india--uruguay-to-sign-pact-to-avoid-double-taxation/752900. பார்த்த நாள்: 29 September 2018. 
  2. "Chennai Daily". பார்க்கப்பட்ட நாள் 12 March 2016.